திரைகடல் திரவியம்

திரைகடல் திரவியம்shipp.jpg

திரைகடல்  ஓடி திரவியம் தேட

மூழ்கிய இடத்தில் நங்கூரம் இட்டு நிற்க்கும் கப்பல்-நாம்

தலைமேல் பிரச்சனையும்-பொறுப்பும்

சகோதரர்களில் கனவும் சுமந்து வந்தோம்- நாம்

மூழ்கியதில் மூச்சுத்தினர வத்தது

புலம்பெயர் நாடுமூச்செடுக்க முட்யாது தினறியதை

 அன்பு  உடன்பிறப்புக்கு சொல்லவில்லை-நாம் 

உயிர் கொடுத்து  உடன் பிறப்பை காப்பாற வந்தோம் 

 உயிரின் பிரிவும் உறவின் பிறரிவு சமம் என்று அறியா- நாம் 

திரைகடல் ஓடி தமிழ்முகம் தேடி

ஆறுதல் அடைந்தோம் கடைசியில் -நாம் 

அப்பா-என் ஒவ்வொரு வயதிலும்

father.jpgஅப்பா-என் ஒவ்வொரு வயதிலும்

ஒவ்வொரு மகன், மகளுக்கு தகப்பன் வெவ்வேறு காலகட்டங்களில் எப்படி தெரிவார்?

 என் 4 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்!

 என் 5 வயதில் : என் அப்பா எல்லாம் அறிந்தவர்!

என் 10 வயதில் : நல்லவர்தான், ஆனால் சிடுமூஞ்சிக்காரர்!

என் 12 வயதில் : நான் சின்னப்-பிள்ளை-யாக இருந்தபோது அப்பா ரொம்ப நல்லவர்!

என் 14 வயதில் : எப்பவும் எதிலும் குறை கண்டுபிடிக்கும் ஆசாமி!

என் 15 வயதில் : கால நடப்பிலும் புரிந்து-கொள்ளாதவர்!

என் 18 வயதில் : சரியான எடக்கு மடக்கு பேர்வழி

என் 20 வயதில் : எங்கப்பா தொல்லை-யைத் தாங்கவே முடியல; எப்படித்தான் அம்மா இந்த ஆளோட குப்பை கொட்றாங்-களோ?

என் 25 வயதில் : எதைச் சொன்னாலும் மறுக்கிறவர்!

என் 30 வயதில் : என் பையனை கட்டுப்0-படுத்தறதே கஷ்டமா இருக்கு. அவன் வயசுல இருந்தப்ப எங்க அப்பான்னாலே எனக்கு எவ்வளவு பயம்!

என் 40 வயதில் : என்னை என் அப்பா எவ்வளவு கட்டுப்பாடா வளர்த்தார்! நானும் அப்படித்தான் பையனை வளர்க்கப்போறேன்

என் 45 வயதில் : அப்பா எங்களை-யெல்-லாம் எப்படி வளர்த்தார் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது

என் 50 வயதில் : அப்பா எங்களை வளர்க்க எத்தனை கஷ்டங்களைச் சந்தித்தார். எனக்கோ ஒரேயொரு பிள்ளையைக்கூட கட்டுப்படுத்த முடியல

 என் 55 வயதில் : எங்கப்பா எவ்வளவு தீர்க்கதரிசனத்தோடு எங்களுக்காக எதையும் திட்டமிட்டுச் செய்தார். அவரைப்போல வேற ஒருத்தர் இருக்க முடியாது

என் 60 வயதில் : எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்!

- எந்தப் பிள்ளையும் தன் தந்தையை தன் வாழ்க்கையின் முதல் கட்டத்தில் பார்த்தது போலவே மீண்டும் பார்ப்பதற்கு இப்படி 56 ஆண்டுகள் ஆகிவிடுகிறது! எனவே காலத்தை வீணாக்காதீர்கள், உங்கள் பெற்றோரை மறந்து-விடாதீர்கள்

4 சாய்ந்த கோபுரங்கள்

4. இந்து மதத்தின் கொல்லாமை

ஈழத்தில் நான் வாழ்ந்த சின்னஞ்சிறு வயதில் கிழமைக்கு ஒரு தடவைதான் அசைவம் உண்பதற்கு வழி கிடைக்கும். எனது குடும்பமும் பக்தியில் ஊறிய வைதீகக் குடும்பம் என்பதால் விரதங்களுக்கும் குறைவில்லை. நவராத்திரி, அல்லது எங்கள் ஊர்க் கோவில்களில் திருவிழாக்கள் தொடங்கிவிட்டால் தொடர்ந்து 10 அல்லது 15 நாட்கள் அசைவ உணவு முற்றிலுமாக தவிர்க்கப்படும். அந்தச் சிறிய வயதில் நானும் பக்தியில் திளைத்திருந்ததால் அவற்றை முழு மனத்துடன் ஏற்றுக்கொண்டிருந்தேன்.

அதே நேரம் இந்த சைவக் கட்டுப்பாடு பிற சமயங்களைப் பின்பற்றுபவர்களிடம் இல்லை என்பதையும் உணர்ந்திருந்தேன். இதற்கான காரணத்தை எனது வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டபோது, இந்து மதம் கொல்லாமையை வலியுறுத்தும் அளவிற்கு மற்ற மதங்கள் வலியுறுத்துவதில்லை, இந்து மதம் மட்டுமே மச்சம் மாமிசம் உண்பதைக் கண்டிக்கிறது என்று அவர்களிடமிருந்து பதில் வந்தது. இதை எண்ணிப் பார்க்கும் போது எனது மனம் இனித்தது. என்ன இந்து மதத்தின் தன்மை என எண்ணினேன். அதுவும் என் மனதில் கோபுரமாக உயர்ந்தது. ஆனால் இன்றோ இந்து மதத்திற்கும் கொல்லாமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.

இந்து மதத்தின் எந்த நூல்களுமே கொல்லாமையை வலியுறுத்தவில்லை. மாறாக உயிர்க் கொலை செய்வதை அவை நியாயப் படுத்துகின்றன. உயிர்களைக் கொன்று யாகத் தீயில் பலியிடும் வழக்கம் பண்டைய ஆரியர்களின் மரபில் மிகச் சாதாரணமாகக் காணப்படுகின்றது. இவ்வளவு ஏன் இந்து மதத்தின் புனிதச் சின்னமான பசுவைக் கொலை செய்வதையே இந்து மதத்தின் புனித நூல்கள் நியாயப் படுத்துகின்றன.

இந்து மதத்தின் மிக முக்கிய நூலான மனுதர்மம் புலால் உண்பதை அனுமதிக்கிறது. பசுக்களை யாகத்தில் வெட்டிப் பலியிடவேண்டும் என்றும் யாகத்தில் படைக்கப் பட்ட பசு இறைச்சியை உண்பது தெய்வீகச் செயல் என்றும் உரைக்கிறது. அத்துடன் வேள்வி சிரார்த்தம் போன்றவற்றில் தரப் படும் இறைச்சியை உண்ண மறுக்கும் பிராமணன் இருபத்தியொரு முறை விலங்ககாப் பிறப்பான் என்றும் கூறுகிறது. (மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 5 சூத்திரம் 27 30 35 39).

இந்து மதத்தின் முக்கிய முனிவர்களான தேவகுரு பிரகஸ்பதி, யாக்ஞவல்கியர், பிரஜாபதி போன்றவர்கள் பசு இறைச்சி உண்பது பாவமல்ல என்று கூறியிருக்கின்றார்கள். கந்த புராணம், தேவி புராணம், விஷ்ணு புராணம், கருட புராணம் போன்ற புராணங்களும் பசு இறைச்சி உண்பதை நியயப் படுத்துகின்றன.

இந்து மதத்தில் கடவுள்களகக் கருதப்படும் சிவன், விஷ்னு, போன்றவர்கள் மது மாமிசம் போன்றவைகளை விரும்பி உண்டதாக புராணங்கள் கூறுகின்றன. மற்றும் இந்திரன், அக்னி, யட்சன், சோமா, அஸ்வினிகுமாரர்கள் போன்றவர்கள் மாட்டிறச்சியை விரும்பி உண்டாதாக பார்ப்பனரின் புனித சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதிகாசக் கதாபாத்திரங்களான இராமன், சீதை, பாண்டவர்கள், திரௌபதி போன்றவர்கள் பசு இறைச்சியை விருந்தாகப் படைத்துத் தாங்களும் உண்டாதாக இதிகாசங்கள் குறிப்பிடுகின்றன.

மகாபாரதத்தில் பாண்டவர்கள் நஞ்சு தடவப் படாத அம்புகளால் மான்களை வேட்டையாடி அவற்றை பிராமணர்களுக்குக் கொடுத்த பின் தாங்களும் உண்டதாகவும் ஜெயத்திரதனுக்கும் அவனது படைவீரர்களுக்கும் பாஞ்சாலி ஐம்பது மான்களைக் கொன்று விருந்து படைத்ததாகச் சொல்லப் பட்டிருக்கிறது.. மகாபாரதத்தின் பதினெட்டு பர்வங்களில் ஒன்றான அனுசான பர்வத்தில் நாரதர் பிராமணர்களுக்கு இறைச்சி, அரிசி, நெய், பால் போன்றவற்றை வழங்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார். வால்மீகியின் இராமாயணத்தில் இளம் கன்றின் இறைச்சியை அரச குரு வசிஷ்டர் சுவைத்து உண்டதாக குறிப்பிடப் பட்டிருக்கிறது. அதே இராமாயணத்தில் தசரதன் தனக்கு வாரிசு வேண்டி ‘புத்திர காமேஷ்டி’ யாகம் செய்த போது பல நூற்றுக் கணக்கான விலங்குகளை வெட்டி யாகத்தில் பலியிட்டதாகச் சொல்லப் பட்டிருக்கிறது.

இந்து மதத்தின் அணிவேராக விளங்கும் பகவத்கீதை உயிர்களைக் கொன்று உண்பது பாவம் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. இந்து மதம் விலங்குகளை மட்டுமல்ல, நரபலி இடுவதையும் நியயாயப் படுத்துகிறது. மகாபாரதத்தில் குருட்சேத்திரப் போர் தொடங்குவதற்கு முன் பாண்டவர்களை வெற்றி பெறச் செய்வதற்காக அருச்சுனனின் புதல்வர்களில் ஒருவனான அரவானை கண்ணன் நரபலியிட்டதாக குறிப்பிடப் பட்டிருக்கிறது.

மனைவியானவள் தனது கணவனுக்கு செய்யும் பணிவிடைகளிலிருந்து தவறினால் அவளை வேட்டை நாய்களால் கடிக்கவிட்டு கொல்ல வேண்டும் என்று மனுதர்மம் கூறுகிறது. (மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 8 சூத்திரம் 371 – 372 ).

வேதங்களில் மிகப் பழமையான ரிக் வேதம் கணவன் இறந்தால் மனைவி தீக்குள் குதித்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது (ரிக். 10, 18.7)

வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் போன்றவற்றை ஆராய்ச்சி செய்த புகழ் பெற்ற இந்திய ஆய்வாளர்களான ராகுல் சங்கிருத்தியாயன், ராஜேந்திர லால் மித்ரா, லட்சுமண சாஸ்திரி, மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளரான ஹெச்.டி.சங்காலியா போன்றவர்கள் உயிர்களை யாகத்தில் பலியிடுவதும் அவற்றை இறைச்சியாக உண்பதும் வேதகால இந்தோ-ஆரியர்கள் மத்தியில் நிலவி வந்திருக்கிறது என்பதையும் பிராமணர்களின் தர்ம சாஸ்திர நூல்கள் அவற்றை நியாயப் படுத்துகின்றன என்பதையும் மறுக்க முடியாத சான்றுகளுடன் விளக்கியிருக்கிறார்கள்.

இவற்றை எல்லாம் பார்க்கும் போது கொல்லாமைக்கும் இந்து மதத்திற்கும் எந்த வித தெடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது. உண்மையில் உயிர்க் கொலைகளைக் மிகக் கடுமையாக கண்டித்தவர்கள் பௌத்தத்தைத் தோற்றுவித்த புத்தரும் சமணத்தைத் தோற்றுவித் மகாவிரரும்தான். வேள்வித் தீயில் உயிர்களைப் பலியிடுவதை தீவிரமாக எதிர்த்தார்கள். மனிதர்களால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிகக் கடுமையான அறக் கோட்பாடுகளை வலியுறுத்தினார்கள். எடுத்துக்காட்டாக, நடக்கும் பொழுது பூச்சி, புழு, எறும்பு போன்ற உயரினங்கள் காலில் மிதிபடக் கூடது என்பதற்காக நிலத்தைப் பெருக்கிக் கொண்டோ அல்லது பாதங்களில் மெதுவான பஞ்சு போன்றவைகளை கட்டிக்கொண்டுதான் நடக்க வேண்டும் என்றார்கள். அதிலும் மகாவீரர் பல படிகள் மேலே போய் பச்சைத் தாவரங்களைத் தவிர்த்து காய்ந்து போன சருகுகளை உண்ணுமாறு வேண்டினார். பௌத்தமும் சமணமும் வலியுறுத்திய கொல்லாமை என்ற அறக் கோட்பாட்டிற்கும் இந்து மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

3 சாய்ந்த கோபுரங்கள்

 ஆதியும் அந்தமும் இல்லா இந்து மதம்

3. ஆதியும் அந்தமும் இல்லா இந்து மதம் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே இந்து மதப் பற்று என்னுள் ஒட்டிக் கொண்டு வந்ததாகவே உணர்ந்திருக்கிறேன். புராணங்களும் இதிகாசங்களும் எனக்கு மனப்படமாகி விட்டன. கவியரசர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதத்தை சிறுவயதிலேயே வாசிக்கத் தொடங்கிவிட்டேன். வாரியார் சுவாமிகள் எழுதிய கட்டுரைகளையும் சொற்பொழிவுத் தொகுப்புக்களையும் மிகவும் விரும்பி வாசித்திருக்கிறேன். பழம் பெரும் சமயம் எல்லா மதங்களுக்கும் முதற்தோன்றிய மதம் என்றும் அது எங்களின் மதமாக இருக்கிறது என்பதை நினைத்து பெருமைப் படத் தொடங்கினேன். இன்றோ அந்தக் கோபுரமும் சாய்ந்து நொருங்கிவிட்டது. எவ்வாறு இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் பிற்காலத்தில் செயற்கையாக உருவாக்கப் பட்ட நிர்வாகக் கட்டமைப்போ அதுபோல்தான் இந்து மதமும் பிற்காலத்தில் செயற்கையாக உருவாக்கப் பட்ட மதக் கட்டமைப்பு. இந்து மதத்தின் தோற்றுவாய் எது? கி.மு. 15 ஆம் நூற்றாண்டளவில் மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து ஹைபர் கணவாய் வழியா நுழைந்தனர் பண்பாட்டு படை எடுப்பாளர்களான ஆரியர்கள். இவர்களின் வருகையால் ஏற்கனவே சிந்து சமவெளி நாகரிகத்தை அமைத்து மேம்பாட்டுடன் வாழ்ந்த தமிழர்களின் பண்பாடும் நாகரிகமும் சிதைவுற்றது. ஆரியர்களின் வரவுக்குப் பின் அவர்களின் வேதமதமாகிய ஆரிய மதம் பரவத் தொடங்கியது. நான்கு வேதங்களான ரிக், யசுர், சாமம், அதர்வணம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதால் அதற்கு வேதமதம் என்ற பெயர் வழங்கப் படலாயிற்று. பிறப்பினால் ஏற்றத் தாழ்வுகளைக் கற்பிக்கும் வருணாசிரம தர்மம்தான் அதன் அடிப்படைத் தத்துவம். அதுவே பிற்காலத்தில் இந்துமதம் எனப் பெயர் பெற்றது. இந்து மதம் என்றோரு மதம் ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. முதன் முதலாக அரேபியர்கள் 13 ஆம் நூற்றாண்டளவில் வடமேற்கிலிருந்து வந்த ஆரியர்களின் வேதமதத்தைக் குறிப்பதற்காக இந்து என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். அதற்கு முன் வேதங்களிலோ, உபநிடதங்களிலா, புராண இதிகாசங்களிலோ இந்து என்ற சொல் பயன் படுத்தப் படவில்லை. வராலாற்றை ஆராயும் பொழுது சிந்து நதிக்ககரையை ஒட்டி இருந்த இடங்கள் ஹிந்துஷ் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. அதற்குச் சான்றாக கிரேக்க கல்வெட்டுக்கள் இருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அனால் அது ஒரு மதத்தையோ அல்லது பண்பாட்டையே குறிப்பதற்கு பயன்படுத்தப்படவில்லை. புவியியல் தன்மையுள்ள இந்தச் சொல் இந்தியர்களின் சமையச் சொல்லாக ஆங்கிலேயர்கள் தங்களது நிர்வாக வசதிக்காகவும் பிரித்தாளும் தந்திரத்திற்காகவும் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஆங்கிலேயர்களின் கிழக்கிந்தியக் கொம்பனியின் நிர்வாகம் ஏற்பட்டவுடன், அவர்களது ஆளுமைக்கு உட்பட்டிருந்த நிலப் பகுதியல் வாழ்ந்த மக்களை முஸ்லீம்கள் என்றும் முஸ்லீம் அல்லாதவர்கள் என்றும் பிரித்தனர். முஸ்லீம் அல்லாதவர்கள் மிகப் பெரும்பான்மையாக வாழ்ந்ததால் அவர்கள் எல்லோருக்கும் பொதுவான சட்ட நெறிகளை உருவாக்கி அதற்கு இந்துச் சட்டம் (Hindu Code). எனப் பெயரிட்டனர். அவர்கள் அவ்வாறு சட்டத்தை உருவாக்க முனைந்தபோது பார்ப்பனர்கள் அவர்களுக்கு மனு தர்ம சாஸ்திரத்தைக் கொடுத்து அதன் அடிப்படையில் சட்டத்தை உருவாக்க வைத்தனர். அது வரைக்கும் அப்படி ஒரு சட்டம் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. பார்ப்பனரும் பிரிட்டிஷாரும் சேர்ந்து பல்வேறு வகையான மதக் கருத்துக்களை, சமய மரபுகளை, வழிபாடுகளை ஒன்றிணைத்து அந்தக் கலவைக்கு இந்து மதம் எனப் பெயரிட்டனர். மனுதர்மத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதால் இந்து மதம் என்பது முழுக்க முழுக்க பார்பனர்களின் வேத மதத்தின் நீட்சியாக அமைந்து விட்டது. சைவமும் மாலியம் என்று அழைக்கப்பட்ட வைணவமும் தமிழ் மண்ணில் தோன்றிய சமயங்களாக தோற்றம் பெற்றாலும் பௌத்தம் மற்றும் சமணத்தைப்போல் பார்ப்பனியத்தை எதிர்த்துக் கொண்டு எழவில்லை. மாறாக அதை நன்றாக உள்வாங்கிக் கொண்டதோடல்லாமல் பார்ப்பனியத்தை எதிர்த்து நின்ற பௌத்தத்தையும் சமணத்தையும் கடுமையாகச் சாடி நின்றன. சைவமும் வைணவமும் பார்ப்பனியத்தை உள்வாங்கிக் கொண்டதால் அந்தச் சமயங்களை இந்து மதம் தன்னுள் சேர்த்துக் கொண்டது. பௌத்தமும் சமணமும் பார்ப்பனியத்தை எதிர்த்து நின்றதால் இஸ்லாம் அல்லாதவை என்ற அடிப்படைக்குள் அவை இந்து மதத்தோடு சேரவில்லை. வெள்ளைக்காரகளால் உருவாக்கப் பட்ட மதம்தான் இந்து மதம் என்பதை இந்துக்களால் போற்றி வணங்கப் பட்ட காலஞ் சென்ற காஞ்சி சங்கராச்சாரி சந்திரசோரேந்திர சரஸ்வதி தனது தெய்வத்தின் குரல் என்ற நூலில் “வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது” என்று வெளிப்படையாகவே ஒத்துக் கொள்கிறார் எனவே எல்லா மதங்களைக் காட்டிலும் மிகவும் பிற்காலத்தில் தோன்றிய மதம்தான் இந்துமதம். அதற்கும் ஆதி, அந்தம் போன்றவற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

2 சாய்ந்த கோபுரங்கள்

காந்தித் தாத்தா வாங்கித் தந்த சுதந்திரம்

யாழ்ப்பாணம் டவுனுக்கு செல்லும் போதெல்லாம் யாழ் போதனா மருத்துவமனைக்கு முன்பாகவுள்ள அந்த முதியவரின் சிலையை நான் அடிக்கடி கண் வெட்டாமல் பார்த்துக் கொள்வது வழக்கம். வளைந்த முதுகுடன் கோலை ஊன்றி அவர் நிற்கும் அழகு அந்தச் சின்னஞ் சிறு வயதிலேயே ஒரு வித ஈர்ப்பை எனக்குள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஒரு நாள் எனது தாத்தாவுடன் அவரது கையைப் பிடித்துக்கொண்டு டவுனுக்குச் செல்லும்போது அவரைப் பற்றிக் கேட்டேன். அவர்தான் காந்தித் தாத்தா இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர் என்றார் தாத்தா. அன்றிலிருந்து யாழ்ப்பாணம் டவுன் என்றதும் எனக்கு காந்தித் தாத்தாவும் நினைவுக்கு வந்து விடுவார். அதன் பின்னர் எனது மாமா ஒருவர் காந்தியடிகளின் கதையைச் சொன்னதாக ஞாபகம்.

ஒரு முறை எனது தந்தையார் இந்தியாவுக்குச் சென்றபோது காந்தி மகான் கதை என்ற நூலை எனக்கு வாங்கி அனுப்பியிருந்தார். அஹிம்சை என்ற சொல்லை முதன் முதலாக காந்தியடிகளின் வரலாற்றைப் படிக்கும்போதுதான் தெரிந்து கொண்டேன். இந்தியாவின் விடுதலைக்கு காந்தியடிகளின் அஹிம்சைதான் காரணம் என நான் படித்த பாடசாலைகளிலும் கற்பிக்கப் பட்டது. கத்தியின்றி இரத்தமின்றி போராடிய காந்தியடிகளின் போராட்டமும் இந்திய விடுதலைக்கு அவர் ஆற்றிய பங்கும் எனக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தின..

காந்தியடிகளின் அஹிம்சைக் கோட்பாட்டைப் காட்டி இந்தியத் தேசிய வாதிகள் ஈழப் போராட்டத்தை சிறுமைப் படுத்திப் பேசி வருகிறார்கள். மகாத்மா காந்தி அஹிம்சை வழியில் போரடி வெற்றி பெற்றது போன்று ஈழத்தமிழர்களும் போராட முடியாத என அவர்கிளின் மேல் மட்டங்களிலிருந்து குரல்கள் இன்றளவும் ஒலிக்கின்றன.

அஹிம்சை உண்மையிலேயே ஒரு நாட்டுக்கு விடுதலையை வாங்கிக் கொடுத்து விடுமா?

உண்மையில் அஹிம்சை என்பது மக்களுக்கு ஒரு வித ஈர்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமே தவிர விடுதலைக்கு ஒரு போதும் வழி சமைத்துக் கொடுக்காது. இலெனின், ஹோசமின், ஃபிடல் கஸ்ட்றோ போன்று உலகப் போராட்ட வரலாற்றில் தனி இடத்தைப் பிடித்தவர்கள் அனைவரும் நடத்தியது வீரம் செறிந்த ஆயுதப் போராட்டங்களே. ஆஹிம்சைப் போரட்டத்தை எதிரிகள் நசுக்கக்கூடத் தேவையில்லை கண்டு கொள்ளாமல் விட்டாலே போதும் அது பல ஆண்டுகள் நீடித்து வெற்றி பெறாமலே போய்விடுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

அப்படி என்றால் இந்தியா எப்படி வெற்றி பெற்றது?

இந்தியாவின் முதல் விடுதலைப்போர் 1857 ஆம் ஆண்டு நடைபெற்றதாக இந்திய வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் அதற்கு ஒரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே 1755 ஆம் ஆண்டு திருநெல்வேலி சிவகிரி மாவட்டத்தில் உள்ள நெற்கட்டான் செவ்வாலைத் தலைநகராமாகக் கொண்டு ஆட்சிசெய்த புலித்தேவன் என்ற தமிழ் மன்னன் வெள்ளையனே வெளியேறு என்ற வீர முழக்கத்தை எழுப்பினான். விடுதலையின் முதல் குரல் புலித்தேவனிடமிருந்துதான் ஒலித்தது. அவனைத் தொடர்ந்து வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டப்பொம்மன், ஊமைத்துரை, மருதுபாண்டியர் போன்றவர்கள் விடுதலைப் போரில் ஈடுபட்டார்கள். இவர்கள் நடத்திய போராட்டங்கள்; அனைத்தும் இரத்தம் சிந்திய ஆயுதப் போராட்டங்களே. இவர்களின் போராட்டங்கள் 1806 ஆம் ஆண்டு நடந்த வேலூர் புரட்சியுடன் முடிவுற்றது. அது மட்டுமல்ல இவர்கள் யாரும் இந்திய உணர்வுடன் போராடவில்லை. ஏங்கள் எல்லோருக்கும் நன்கு தெரிந்த வீரபாண்ய கட்டப்பொம்மனை எடுத்துக் கொள்வோம். கட்டப்பொம்மன் யார்? திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சி என்ற சிறு பகுதியை ஆண்டு வந்த குறுநில அரசன். அவனுக்கு இருந்த கவலை தன்னுடைய ஆளுமைக்கு உட்பட்டிருந்த பாஞ்சாலங்குறிச்சி வெள்ளையர்கள் கைக்கு போய்விடக்கூடாது என்பது மட்டுமே.

அதேபோன்று வடபுலங்களை எடுத்துக் கொண்டால் வெள்ளையர்களை எதிர்த்து ஆயுதப் போராட்டங்களை மேற்கொண்ட ஜான்சி ராணி லட்சிமிபாய், ராணா பிராதாப்சிங் போன்றவர்களும் தங்கள் நாட்டு உணர்வுடன் போரிட்டார்களேயன்றி இந்திய உணர்வுடன் அல்ல. 1755 ஆம் ஆண்டு தொடங்கிய ஆயுதப்போராட்டம் 1945 இல் நேதாஜி மறையும்போதும் கனன்று கொண்டுதான் இருந்தது. இவ்வாறு தனித்தனியே நடந்த போராட்டங்களையே பிற்காலத்தில் காந்தியடிகள் ஒன்றாக இணைத்து இந்தியத் தேசியப் போராட்டமாக மாற்றினார். 1920 ஆம் ஆண்டிலிருந்து இந்திய விடுதலைப் போராட்டம் காந்தியடிகளின் தலைமையின் கீழ் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியது. இருந்தாலும். இந்திய விடுதலைக்கு அவரது அஹிம்சை காரணமில்லை என்பதே வரலாறு காட்டும் உண்மை.

அஹிம்சை இந்தியவுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது உண்மை என்றால் பிரிட்டனின் கொலனி ஆதிக்கத்தில் இருந்த இலங்கை, பர்மா (தற்போது மியான்மார்), மலேசியா போன்றவற்றின் விடுதலைக்கும் அஹிம்சையா காரணம்?

உண்மையில் காந்தியடிகள் ஒரு மிதவாதத் தேசியவாதியாகவே தன்னை வெளிக்காட்டி நின்றார். ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு அவரிடம் காணப்படவில்லை. அவரது போராட்டம் பிரித்தானியாவுக்கு அழுத்தத்தையோ தலையிடியையோ கொடுக்கவில்லை. தேசியத்தை தெய்வீகத்துடன் இணைத்து ஆன்மீக அரசியல் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது இரபிந்திரநாத் தாகூர் காந்தியடிகளிடம் ஆன்மீகம் வேறு அரசியல் வேறு, தேசியம் வேறு தெய்வீகம் வேறு எனவே இரண்டையும் ஒன்றாக்க வேண்டாம் என வேண்டிக்கொண்டார். ஆனால் காந்தியடிகளோ அதைக் கேட்காமல் ராமராச்சியம் காண வெளிக்கிட்டார்.. எனவே அவரது ஆன்மீக அரசியல் மிகப் பெரிய ஏகாதிபத்தியத்தை வீழ்த்திவிட்டது என்று சொல்வது நகைப்புக்குரியது

இந்திய விடுதலைக்கு எது உண்மையான காரணம் என்பதை John Kenneth Galbraith என்ற கனடிய-அமரிக்க பொருளாதார அறிஞர் தனது A Journey Through Economic Time என்ற நூலில் விரிவாக அலசுகிறார். கொலனியாதிக்கத்தில் உள்ள நாடுகளில் நடந்த போராட்டத்தை மறுத்து பொருளாதாரமே இந்திய விடுதலைக்கு அடிப்படைப் காரணம் என்று கூறுகிறார்.

அவரது கருத்து வரலாற்றைக் கூர்ந்து கவனிக்கும்போது மிகச் சரியாகவே தென்படுகிறது. தனிப்பட்ட மனித வாழ்வில் தொடங்கி அரசுகள் வரை அனைத்திற்கும் முதுகெலும்பாக விளங்குவது பொருளாதாரக் காரணிகளே. இந்தியா, இலங்கை, பார்மா போன்ற நாடுகளை அடிமை கொண்ட பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கொம்பனி என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தலையாய நோக்கம் ஆசிய நாடுகளைச் சுரண்டி தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுதான். வணிக நோக்கில் வந்தவர்கள் அடுத்து நாடுகளை அடக்கியாளத் தொடங்கினார்கள்.

1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் உலக அரசியலில் மிகப் பெரிய மாற்றங்கள் தென்பட்டன. அமரிக்காவும் சோவியத் யூனியனும் மிகப் பெரிய வல்லரசாக மாறத் தொடங்கின. இரு வல்லரசுகளுக்குமிடையில் பனிப்போர் தொடங்குகியது. அதுவரைக்கும் சூரியன் மறையாத பேரரசு என்ற இறுமாப்புடன் இருந்த பிரிட்டன், இரண்டாம் உலகப்போரில் நேரடியாக பங்கெடுத்ததன் விளைவால் பாரிய பொருளாதார வீழ்ச்சியைக் கண்டது. எனவே தனது பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய வரலாற்றுத் தேவை பிரிட்டனுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் தனது நாட்டிலிருந்து வெகு தூரத்தில் உள்ள இந்தியா என்ற மிகப் பெரிய நிலப்பரப்பை நிர்வாகம் செய்ய முடியவில்லை. இந்தியாவுக்கு விடுதலையைக் கொடுக்க அவர்கள் முடிவுசெய்கிறார்கள். இதுதான் இந்திய விடுதலையில் ஒளிந்திருக்கும் உண்மைக் காரணம்.

எனவே காந்தித் தாத்தாவால் சுதந்திரம் கிடைத்தது என்ற கருத்து மிகைப் படுத்தப் பட்டது என்பது மட்டுமல்ல வரலாற்றுக்கு முரணானதும் கூட..

« பழைய வரவுகள்