5 சாய்ந்த கோபுரங்கள்

images1.jpg

அனைத்துலக மொழியா ஆங்கிலம்?

தமிழர்களில் பலருக்கு ஆங்கிலத்தில் இருக்கும் மோகம் ஆங்கிலத்தை தாய் மொழியாகக் கொண்ட ஒரு ஆங்கிலேயனுக்குக் கூட இருக்குமோ தெரியாது என்று சில ஆண்டுகளுக்கு முன் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது கூறினார். அவர் தமிழ் நாட்டுத் தமிழர்களைக் குறிப்பாக சொல்லியிருந்தாலும் ஈழத் தமிழர்கள் பலருக்கும் அவர் கூறிய வரி பொருந்தாமல் இல்லை.

ஆங்கிலம் சிறு பருவத்திலேயே தமிழ் சிறார்கள் மீது திணிக்கப் படுகிறது. அதற்கு நம்மில் பெரும்பாலானோர், ஆங்கிலம் அனைத்துலக மொழி (International Language), அதைக் கற்பதால் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று ஒரு காரணத்தை முன்வைப்பார்கள்.

காலம் காலமாக முன்னிறுத்தப் படும் இந்தக் கருத்தால் ஒருவரது கல்வித் தகமையை ஆங்கிலம் நிர்ணயிக்கும் அளவிற்கு மாறியிருக்கிறது. தமிழில் அதியுர் கல்வி கற்ற ஒரு பேராசியருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்காவிட்டால் அவர் படிக்காதவர் என்றும் அதே நேரம் பத்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த ஒருவர் நன்றாக ஆங்கிலம் பேசத் தெரிந்தால் அவர் படித்தவர் என்ற நினைப்பும் தமிழ் சமூகத்தில் இருந்து வருகிறது. தமிழ் நாட்டுத் திரைப் படங்களும் ஆங்கிலம் பேசும் திறனை வைத்தே படித்தவனையும் படிக்காதவனையும் வேறு படுத்திக் காட்டும் வழக்கத்தை தொடர்ந்து செய்கின்றன.

சிறு வயதிலிருந்தே ஆங்கிலக் கல்வி எனக்கு திணிக்கப் பட்டதை உணர்ந்திருக்கிறேன். அந்தத் திணிப்பிற்கு கூறப்பட்ட காரணங்களால் ஆங்கிலம் மீது ஒரு வித மோகம் ஏற்பட்டது. அந்தச் சிறு வயதில் ஆங்கிலப் புத்தகங்கங்களைப் படிப்பதை ஒரு பெருமையாகவும் நினைத்திருந்தேன். இன்றோ ஆங்கிலம் அனைத்துலக மொழி என்பது ஒரு அனைத்துலகப் பொய் என்பதையும் நன்றாக தெரிந்து கொண்டேன்.

உலக மக்கள் தொகை கணக்கின்படி, அதிக அளவு மக்களால் பேசப் படும் மொழி சீன மொழிதானே தவிர ஆங்கிலம் அல்ல. ஆங்கிலேயர்கள் குடியேறின நாடுகளான அமரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா நியூசிலாந்து, மற்றும் அதன் கொலனியாதிக்கத்தில் இருந்த இந்தியா, இலங்கை மற்றும் கென்யா, டன்சானியா, சிங்கப்பூர் இன்னும் ஒரு சில நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளில் ஆங்கிலம் பேசப் படுவதில்லை. இன்றைய உலகமாயமாக்கள் சூழலில் அமரிக்கா பிரித்தானியா ஆகிய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களால் வணிக அளவில் அதன் வளர்ச்சி அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டாலும் ஆங்கிலம் இல்லாத பல நாடுகள் முன்னேறி இருக்கின்றன. ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என்று அழைக்கப் படும் சுவிற்சலாந்தில் ஜேர்மன், பிரஞ்ச், இத்தாலியன், ரோமன் ஆகிய நான்கு மொழிகளும்தான் அலுவல் மொழியாக இருக்கின்றன. ஆங்கிலத்திற்கு அங்கு இடம் இல்லை. இத்தனைக்கும் ஐ.நா. மன்றத்தின் இரண்டாவது தலைமைச் செயலகம் அங்குதான் உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘The Hindu’ என்ற ஆங்கில நாளேட்டில் ஒரு செய்தியைப் படித்தேன். அதிகார பூர்வமான இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தை பரிந்துரை செய்வதற்கு ஜப்பான் நாட்டு அரசாங்கம் விரும்புகிறது என்று அதில் செய்தி வெளியாகி இருந்தது. அப்படி என்றால் இது வரை காலமும் அதிகார பூர்வமான இரண்டாவது மொழியாகக் கூட ஆங்கிலம் அங்கு இருந்ததில்லை என்பது புலனாகிறது. ஜப்பான் நாடு இரண்டாவது உலகப் போரின் போது அமரிக்காவால் சின்னா பின்னமாக்கப் பட்ட நாடு, ஆனால் இந்த அரை நூற்றாண்டு காலத்தில் அவர்கள் தங்கள் தாய் மொழி வழியாகவே அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இன்று பொருளாதாரத்தில் அமரிக்காவையே விஞ்சி நிற்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கும் சீனாவில் யாருக்குமே ஆங்கிலம் தெரியாது.

பிரான்ஸ், ஜேர்மன் போன்ற பிற ஐரோப்பிய நாடுகளும் தங்கள் தாய் மொழிகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன. பிரான்ஸ் நாட்டு அரசியல் தலைவர்களுக்கே ஆங்கிலம் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவருடைய ஆங்கில அறிவு பிரான்ஸ் போன்ற நாடுகளில் எந்த அளவிற்கு பயன்படும் என்பதை எனக்கு ஏற்பட்ட சிறு அனுபவத்தின் வழியாக பதிவு செய்யலாம் என்று நினைக்கின்றேன். பாரிசில் உள்ள ஒரு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் கணக்காளர் வேலைக்கான நேர்முகத் தெரிவுக்குச் சென்றிருந்தேன். அது ஒரு வெளிநாட்டு நிறுவனம். எனக்கு ஆங்கிலமும் பிரஞ்சும் தெரிந்திருக்கும் காரணத்தால் வேலை எளிதில் கிடைக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் அவர்களோ எனக்கு ஸ்பானிஷ் தெரியாத காரணத்தால் நிராகரித்து விட்டார்கள். காரணம் அது ஒரு ஸ்பெயின் நாட்டு நிறுவனம். இதுவே அது ஒரு இங்கிலாந்து நிறுவனமாக இருந்திருந்தால் என்னை ஒரு வேளை எடுத்திருப்பார்கள். ஆங்கிலமும் ஸ்பானிசும் ஒரே அளவில்தான் அங்கு மதிப்பிடப் படுகின்றன. அதற்கு மேல் ஆங்கிலத்திற்கு அங்கு முக்கியத்துவம் இல்லை. இரு மொழிகள் தெரிந்தவர்கள் இந்த அளவில்தான் அங்கு பலனடைகிறார்கள்.

மொழியியல் தன்மையுடன் பார்த்தால் ஆங்கிலம் ஒரு வளமான மொழி அல்ல. பல மொழிகளிலிருந்து கடன் வாங்கித்தான் தன்னுடைய சொற் பஞ்சத்தையே அது தீர்த்துக் கொண்டது. பெரும்பாலான ஐரோப்பிய மொழிகள் இலத்தின் மொழியிலிருந்து வந்ததாக மொழியியல் ஆய்வுகள் கூறுகின்றன. ஆங்கிலம் இலத்தினிலிருந்து நேரடியாக வந்த மொழி அல்ல. இலத்தினிலிருந்து ஜேர்மன் உருவாகி அதிலிருந்து ஆங்கிலோ சக்சன் என்ற ஒரு மொழி உருவாகி அதிலிருந்து வந்த மொழிதான் இங்கிலிஷ் என்று அழைக்கப் படும் ஆங்கிலம். இன்றளவும் ஆங்கிலேயர்களால் கொண்டாடப்படும் ஒரே ஒரு இலக்கியவாதி என்றால் அது வில்லியம் ஷேக்ஸ்பியர்தான். ஆங்கில மொழியை குறைத்து மதிப்பிடுவது எனது நோக்கமல்ல. தாய் மொழியை நேசிக்கும் அதேநேரம் அனைத்து மொழிகளையும் மதிக்க வேண்டும் என்பதுதான் முற்றிலும் நியாயமனது.

எங்களின் தேவைக்கும் திறமைக்கும் ஏற்ப எத்தனை மொழிகளையும் நாம் கற்கலாம் அதற்கு ஆங்கிலமும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் இங்கிலாந்து போன்ற நாட்டில் வாழும் தமிழர்கள் ஆங்கிலத்தைக் கற்பது ஒரு அடிப்படைத் தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் மற்ற மொழிகளுக்கு இல்லாத ஒரு முக்கியத்துவத்தை ஆங்கிலத்திற்குக் கொடுப்பதும் எல்லாவற்றுக்கும் மேலாக தாய் மொழியைக் காட்டிலும் அதற்கு முன்னுரிமை கொடுப்பதும் ஏன்???

தட்டவேண்டாம்! திறேந்தேதன் இருக்கு!!!!

calnzvfy.jpgtho;f;if fiyapd; Kjy; rhtpNa nghWikjhd;

tho;f;if fiyapd; Kjy; rhtpNa nghWikjhd;

tho;f;if fiyapd; Kjy; rhtpNa nghWikjhd;
 
,e;j mtru cyfpy; njhiye;J Nghd thHj;ijfspy; mJTk; xd;whfp NghdJ.
 
vjw;Fk; mtruk;@ vy;yhtw;wpf;Fk; mtruk; mJ jhd; ,e;j ,Ugj;jp xd;whk; E}w;whz;bd; %y ghi\ahf Ngha;tpl;lJ.
 
cztpy; mtruk;@ cilapy; mtruk;@ tho;T Kiwapy; mtruk;. mJNt et ehfhpf tho;f;if Kiw mjdhy; jhd; cyfnkq;Fk; mtru epiy gpwg;ngLf;fg;gl;Ls;sJ.
 
,d;iwa mjpNtf tpQ;Qhdk; ,uz;il jhd; kdpjDf;F mspf;fpwJ.
 
xd;W mtruk;@ mLj;jJ Nrhk;Ngwpj;jdk;
 
mtruk; kdpjid RWRWg;ghf;f tpy;iy@ khwhf Nrhk;Ngwpjdj;ij jhd; tsHfpwJ.
jl;lNtz;lhk;
fhiyapy; tpijia tpijf;Fk; kdpjd;@ khiyapy; mWtilia Kbf;f mtrug;gLfpwhd;
 
kdpj kdk; mtruj;ij jhd; vjpYk; Kd; nkhopfpwJ.
 
tpaHit topAk; Kd;Nd tUkhdj;ij ghHf;f Jbf;FJ kdk;
 
typia czUk; Kd;Nd Rfj;ij Rfpf;f Jbf;FJ kdk;
 
kdpj cwTfspy; $l mjpf mtruk; jhd; cwTfis uzkhf;fpwJ.
 
tho;f;ifia urpf;f mtruj;ij epWj;Jq;fs;@ vjpYk; nghWikAld; fhj;jpUq;fs;.
 
nghWik ,aw;ifahdJ@ ,ay;ghdJ.
 
fhw;wpd; Ntfj;jpy; mtrukpUe;jhy; mJCiu mopf;Fk; GayhfpwJ.
mJ nghWikAld; tPRk; NghJ jhd; njd;wyhf RfkhfpwJ.
 
G+kp nghWikAld; RoYtjhy; jhd;> caphpdq;fs; tho KbfpwJ.
 
nghWik tpiyNawg;gl;lJ.
 
nghWikAld; ,Uf;Fk; NghJ jhd; kdk; nghf;fp\khdij milfpwJ.
 
epyj;Jf;fbapy; nghWikAld; fhj;jpUf;Fk; epyf;fhp jhd; jq;fkha; khWfpwJ.
 
nghWik ,y;yhjitfs; – fhpahf khwp jPapy; vhpfpwJ. nghWikAld; ,Ug;gitfs; – jq;fkha; myq;fhukha; epiyj;J epw;fpwJ.
 
kdKk; nghWikAld; fhj;jpUf;Fk; NghJ jhd; mjd; Njitfis mJ thq;fp nfhs;s KbAk
;lNtz;lhk;
,ij mwpahj kdpj $l;lk; mtru mtrukha; mila epidf;fpwhHfs;@ gpd;dH mila Kbahky; mOfpd;wdH
 
nghWik epiyahdJ.
 
Gy;iy ghHf;Fk; NghJ kuq;fSf;F MAs; mjpfk;.
 
kuq;fis ghHf;Fk; NghJ kiyf;F MAs; mjpfk;.
 
G+ kuj;ij tpl mjpf ryryg;G nra;fpwJ.
kuk; kiyia tpl nghWikapy;yhky; fhw;wpy; Mb mtrug;gl;L tpOfpwJ.
 
kiy mg;gb my;y nghWikAld; epd;W epiyf;fpwJ.
 
Miw ghHf;Fk; NghJ fly; nghWikahdJ.
 
mjpy; mjpNtfk; ,Ug;gjpy;iy@ fhl;Lnts;sk; ,Ug;gjpy;iy
 
mJ jhd; mij epiyj;J epw;fpwJ.
 
nghWik kdpj kdjpw;F ,ir Nghd;wJ.
 
,irapy; Ntfk; $bdhy; ,iur;ry; jhd; kpQ;rp ,Uf;Fk;@ ,jk; ,Uf;fhJ.
 
nghWik thHj;ijfspy; RL nrhy; Vw;fhJ.
 
mtruk; ,jaj;ij Ntfkha; JbJbf;f itf;Fk;. %isf;Fs; mjpf uj;jj;ij ghaitf;Fk; .
 
mJ czHr;rpfSf;F Ntfk; nfhLf;Fk;
 
czHr;rpfs; NtfkhFk; NghJ> mJ fbdkhf ntspg;gLk
vy;yh czHr;rpapYk; NfhgNk NkNyhq;fp epw;Fk;.
 
Nfhgk; NkNyhq;f Kbahj gl;rk;> Nrhfk; epiwAk;.
Nrhfk; kdRf;Fs; tpuf;jp nfhLf;Fk;.
 
mjdhy;jhd;> vy;yh cwTfSf;F ,ilapy; ,d;gk; ,Ug;gjpy;iy.
 
fhjypy; $l nkd;ikapUg;gjpy;iy
 
jha; $l Nria nghWikAld; tsHf;f Kbahky; jtpf;fpwhs;.
 
mtruj;ij epWj;Jq;fs;.
 
nghWikAld; ,Uf;Fk; NghJ jhd; ,jak; nkd;ikahFk
,jak; nkd;ikahFk; NghJ jhd; md;G Ruf;Fk;
 
md;G jhd; tho;f;ifia urpf;f nrhy;Yk;
 
tho;f;iff;F Njitahd MrpHthjj;ij nfhz;L tUk;.
 
mjpf mtrufhuHfs; cyif fhag;gLj;jp tuyhw;wpy; epd;whHfs;.
 
mikjpahdtHfs; cyFf;F ,isg;ghWjy; je;J tuyhw;wpy; epw;fpwhHfs;.
 
nghWik jhd; cyif urpf;f itf;Fk;
 
kdpj cwTfis nrk;ikgLj;Jk;.
nghWikAld; vy;yhtw;wpf;Fk; fhj;jpUq;fs;.
 
mijjhd; fhyk; KbAk; NghJ> epr;rak; mJ fpilf;Fk;.
 
gj;J jpq;fs; nghWikapy;yhky; ,Ue;jhy;> fU Foe;ijahf KbahJ.
 
g+ g+j;jTld; gokhFk; Kd;G mJ fhahf rpy fhyk; fhj;jpUf;f Ntz;Lk;.
 
mJ Nghy; nghWikAld; ,Ue;jhy; fhyk; fpl;Lk; NghJ ifapy; fpilf;Fk;.
 
vjpYk; nghWikAld; fhj;jpUg;Nghk;.

தமிழ் தட்டச்சின் தந்தை ஆர் முத்தையா!

தமிழ் தட்டச்சின் தந்தை ஆர் முத்தையா!

சரஸ்வதி இதழிலிருந்து…
- கா. மாணிக்க வாசகர் -

[தமிழ்த் தட்டச்சுத்துறைக்கு அன்று ஈழத்தமிழரொருவரான ஆர்.முத்தையா ஆற்றிய பங்களிப்பினை சரஸ்வதியில் வெளிவந்த இக்கட்டுரை புலப்படுத்தும். இக்கட்டுரையினை எமக்கு அனுப்பி வைத்த இலண்டனில் வசிக்கும் விசாகப்பெருமாள் வசந்தன் அவர்களுக்கு எம் நன்றி. -ஆசிரியர்]

ஆங்கிலேயர் அரசியல் நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கும் ஆங்கில மொழிகளும் உலக மொழியானதற்கும் ஆங்கிலத் தட்டச்சு (டைப்ரைட்டர்) ஒரு முக்கியமான காரணம். 1875-ம் ஆண்டில் “ரெம’ங்டன்” தட்டச்சு விற்பனைக்கு வந்தபொழுது வர்த்தக ஸ்தாபனங்களே பெரும்பாலும் அவைகளை வாங்கி உபயோகித்தன. பின்பு அரசினரும் பிற ஸ்தாபனத்தாரும் தனி மனிதர்களும் தட்டச்சை விரும்பி வாங்கினார்கள். ஆங்கிலத்தில் இருபத்தாறு எழுத்துக்களே இருக்கின்றன. தமிழில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216, ஆய்த எழுத்து 1 ஆக மொத்தம் 247 எழுத்துக்கள் இருக்கின்றன. இவை தவிர எண்களும் குறியீடுகளும் வடமொழி மூலம் வந்த சில முக்கியமான எழுத்துக்களும் இருக்கின்றன. ஆகவே ஆங்கிலத்தைவிட ஏறக்குறைய பத்து மடங்கு அதிகமான எழுத்துக்களை உடைய தமிழ் மொழியை ஒரு இயந்திரத்தில் அமைப்பது சுலபமான விஷயம் அல்ல. ஆங்கில மோகம் வானளாவின்ற அந்த நாளில் இதைச் செய்ய நினைத்தவர் சிலர் இருந்தாலும் செய்து முடிக்கும் உடையோர் இல்லை.

பெரு எண்ணிக்கையில் செய்விக்க பண முதலீடு செய்யும் துணிவு வேண்டுமே, பண முதலீடு செய்தாலும் விற்பனை ஆகுமா? இந்தப் பிரச்னைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாது துணிச்சலுடன் செயலில்
இறங்கினார் ஒரு தமிழர்.

ஈழ நாட்டில் வாழும் தமிழர்களின் தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணம் அப்போது சிறந்த அறிஞர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் உலகுக்கு அளித்துக் கொண்டே இருக்கிறது. இந்தத் திருநாட்டின் ஒப்பற்ற ஒருவர்தான் தமிழ் தட்டச்சின் தந்தையான ஆர் முத்தையா அவர்கள்.

முத்தையா யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிற்குளியில் 24-2-1886-ல் பிறந்தார். இவருடைய தந்தையாரான ராமலிங்கம் பண்பாடு மிக்கவர், கல்வியாளர், பக்திமான். இவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சீடர்களில் ஒருவராக இருந்தார். ராமலிங்கம் அவர்களுக்கு ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் பிறந்தார்கள். இறுதி ஆண் பிள்ளைதான் முத்தையா. இவர் ஏழு வயதாக இருக்கும் பொழுது, இவருடைய தந்தையார் இறந்து விட்டார். பின்பு தாயின் பராமரப்பிலேயே வளர்ந்து கலாசாலையில் பயின்று வந்தார். சில வருஷங்களில் தாயும் நோய் வாய்ப்பட்டு இறந்தாள். இவர் 1907-இல் மலாயா நாட்டுக்குப் புறப்பட்டார்.

சிங்கப்பூரை அடைந்ததும் தொடர்ந்து போர்னியாவுக்குப் போக எண்ணிய பொழுது, டானியல் போதகர் என்பவர், தாம் அங்கேயே இவருக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொல்ல அப்படியே இவரை ரெயில்வே இலாகாவில் வேலைக்கு அமர்த்தினார். சில நாட்களில் அந்த வேலையை விட்டு ஐல்ஸ்பெரி அண்ட கார்லாண்ட என்ற பிரபலமான வர்த்தக ஸ்தாபனத்தில் வேலையேற்றார். இரண்டாண்டுகளுக்குப் பின், அதன் பிரதம குமாஸ்தாவாக உயர்ந்து, 1930ஆம் ஆண்டு வரையில் பணி புரிந்தார். இந்தக் காலத்தில் இவர் உயர்தரக் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து ஆகியவைகளைக் கற்றார். 1913-இல் நடைபெற்ற ஸ்லோன் டுப்ளோயன் சுருக்கெழுத்துப் போட்டியில் சர்வதேச வெள்ளிப் பதக்கம் இவருக்குக் கிட்டியது. அதோடு ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், கைத்தொழில் நூல்கள், சமய நூல்கள் ஆகியவற்றையும் கற்றார். இவ்வளவு திறமை வாய்ந்தவராய் இருந்தும் அரசாங்க உத்தியோகத்தை இவர் நாடியதே இல்லை. சுயமுயற்சியில் அதிக நம்பிக்கை உடையவர், அஞ்சா நெஞ்சம் படைத்தவர். தமக்குச் சரியென்று பட்டதைத் துணிவுடன் இவர் எடுத்துச் சொல்வார்.

இவர் கடமையாற்றிய ஸ்தாபனத்தில் இருந்த ஒழுங்கும் நிர்வாகத் திறமையும் இவரைக் கவர்ந்தன. அவர்களைப் போல் தமிழனும் ஏன் இருக்க முடியாது என்று சிந்தித்தார். தமிழில் ஒரு தட்டச்சு இல்லாக் குறையையும் உணர்ந்தார். ஆகவே, அன்று தொடங்கி இந்த முயற்சியில் ஈடுபட்டார். தனிமையாக ஓர் அறையில் 247 எழுத்தின் வடிவங்களை ஒரு புறமும் தட்டச்சின் 46 விசைகளை மறு பக்கமும் வைத்து எழுத்துக்களை எப்படி விசைகளில் அமைப்பது என்று சிந்தித்தார். கிடைத்த நேரங்களை யெல்லாம் இந்த ஆராய்ச்சிக்கே செலவிட்டார். தம் தமிழ் நண்ர்பர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடைய அபிப்ராயங்களையும் சேகரித்தார். எவ்வளவு முயற்சி செய்தும் எழுத்துக்களை 72-க்கு மேல் குறைக்க முடியவில்லை. அதுவரையில் கிடைத்த வெற்றியைக் கொண்டு தட்டச்சை நிறைவேற்றும் பணியை மேற் கொண்டார்.

முத்தையா அவர்கள் தாம் கண்டு பிடித்த தட்டச்சை “ஸ்டாண்டர்ட்” பெரிய தட்டச்சு என்று குறிப்பிட்டார். அது சிறப்பான பல அம்சங்களை உடையது. தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால் அவை எல்லாவற்றையும் நான்கு வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அசைக்க முடியாது. எனவே, பல எழுத்துக்களுக்குப் பொதுவான உள்ள சில குறியீடுகளைத் தனித் தனி விசைகளில் அமைத்து அவைகளைத் தேவையான எழுத்துக்களுடன் சேர்த்து அச்சடிக்கக் கூடிய விசைப்பலகையை அமைக்க வேண்டும். அப்படியானால், இரண்டு விசைகளை அழுத்திய பின்பே அச்சை நகரச் செய்ய வேண்டும். பல பரீட்சைகள் செய்து கடைசியாக நகரா விசையைக் கண்டு பிடித்தார். அதாவது “ந“ என்ற எழுத்திலுள்ள விசிறியை அடிக்கும் பொழுது அச்சு நகராது. எஞ்சி யுள்ள “ந”வை அடித்த பின் தான் அச்சு நகரும். மெய்யெழுத்துக்களும் இப்படியே அச்சாகின்றன. இவர் உண்டாக்கிய நகரா விசையையே இன்றும் தட்டச்சு உற்பத்தியாளர்கள் உபயோகிக்கிறார்கள்.

ஆங்கிலத் தட்டச்சைப் போலல்லாது தமிழ்த் தட்டச்சுக்களின் விசைப்பலகை அமைப்பு வேறு விதமாக இருக்கிறது. ஒரு யந்திரத்தில் பழகியவர் அதே முறையில் வேறொரு யந்திரத்தில் அச்சடிக்க முடியாது. ஆகவே, இதை ஒருமைப்படுத்த எண்ணிய சென்னை அரசினர் 1955-ஆம் ஆண்டில் ஒரு குழுவை நிறுவினார்கள். அதன் சிபார்சுப்படியும் பிறருடைய ஆலோசனையின் பேரிலும் இப்பொழுது விசைப் பலகையமைப்பில் ஒருமைப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆயினும், முத்தையா அவர்களின் கண்டு பிடிப்பிலிருந்து அதிக மாற்றம் புதிய முறையில் இல்லை. புதிய அமைப்பில் இல்லாத சில சிறப்பான அம்சங்களும் இவருடைய தட்டச்சில் உண்டு. இவை புதிய அமைப்பில் சேரவில்லை. இப்பொழுது க’, த’ ஆகிய எழுத்துக்களின் விசிறிகள் அந்த எழுத்துக்களின் மேற்கோட்டின் நுனியில் இருக்கின்றன. இது தமிழ் எழுத்தைப் பிழையாக்குவதாகும். முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பில் க’, த’ போன்ற எழுத்துக்களுக்கு ஒரு விசிறியும், ண’, ன’ போன்ற
எழுத்துக்களுக்கு வேறு ஒரு விசிறியும் அமைத்திருப்பது குறிப்பிடத் தக்க சிறப்பாகும்.

இப்பொழுதிருக்கும் சில தட்டச்சுகள் இரண்டு கை விரல்களுக்கும் சமமாக வேலை கொடுக்கவில்லை. இந்தக் குறையைத் தம் தட்டச்சில் இவர் நீக்கியிருக்கிறார். தமிழெழுத்துக்களில் ய, ள, க, ப, ர, ம, ட, ந, ச, வ, ல, ன, டி ஆகிய எழுத்துக்கள் அடிக்கடி உபயோகமாகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டார்கள். ஆகவே, அரசினருடைய விசைப்பலகையில் கீழ் திட்டத்தில் இவை அமைந்திருக்கின்றன. முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பும் இதையொட்டியே இருக்கிறதென்றால் இவர் எவ்வளவு ஆராய்ச்சியின் பின் இதை உருவாக்கியிருக்க வேண்டுமென்று நாம் ஊகிக்கலாம்.

முதலாவது உலக யுத்தம் முடிந்த பின்பு, தாம் கண்டு பிடித்த விசைப் பலகையை ஜெர்மனியிலுள்ள சைடல் அன்ட் நளமான் என்ற வியாபர ஸ்தாபனத்திடம் இவர் ஒப்புவித்து அச்சுக்களை உருவாக்கினார். பெரும் எண்ணிக்கையில் அதை இறக்குமதி செய்து விற்றும் வந்தார். இதோடு இவருடைய முயற்சி முற்றுப் பெறவில்லை. தாம் அமைத்த விசைப் பலகையில் சில குறைகள் இருக்கக் கண்டார். அவைகளை நீக்க’, “பிஜோ”, “ஐடியல்” ஆகிய “போர்ட்டபிள்” தட்டச்சுக்களை உருவாக்கினார். இவைகளைப் பின்பற்றியே “ஆர் ஸ’”, “எரிகோ”, “யுரேனியா”, “ஹால்டா” போன்ற தட்டச்சுகள் வெளியாயின.

முத்தையா அவர்கள் சிறந்த சமூக சேவையாளராகவும் விளங்கினார். காலஞ் சென்ற தெய்வசிகாம ஆசாரியருடன் சேர்ந்து குடிசைக் கைத்தொழிலின் அபிவிருத்திக்கு அரும்பாடு பட்டார். இலங்கையில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களைப் பற்றி ஆங்கிலத்தில் நூல் ஒன்று எழுதி அதை அச்சேற்றுவதற்கு முன்பே காலமாகி விட்டார்.

நன்றி: சரஸ்வதி இதழ், 1959

வலி

we_lost_it1.jpgவலி

என் இளமைக்குரியவனே – என்
இதயம் இளகியது உன்
செந்தமிழ் பேச்சில் அல்லவா?

வேங்கைபோல் வந்தவனே -என்
உள்ளத்தின் உயிரை
உசுப்பிவிட்டுச் சென்றவனே

உயிர் பிரிந்து போய்விடுமுன்
உறவாட வந்துவிடு – இதயத்தை
இருட்டறையில் பூட்டிவைக்க முடியவில்லை

ஒரு வரி சொல்லவா?

உடல் வலி எடுத்தபோது
இதயம் அழுகிறது
என் இதயம் வலி எடுக்கும்போது
நீ அழுவாயா எனக்காக??

நேசமுடன்..
-நித்தியா

நதிமூலம்

நதிமூலம்
எழுதியவர்: வைரமுத்து

எப்போதெல்லாம் மனதில்
உருவம் தெரியாத
பனிமூட்டமொன்று
உலவிக் கலைகிறதோ

இதயக்கல் எப்போதெல்லாம்
குழைந்து குழைந்து
கூழாகிறதோ

உடனடியாக
உருகவில்லையெனில்
உயிர் கெட்டிப்பட்டுவிடுமென
எப்போதெல்லாம் உள்ளம் எச்சரிக்கிறதோ

ஒரு கண்ணீர் ஆறவிட்டு
இன்னொரு கண்ணீருக்கு
மனது எப்போது தயாராகிறதோ

தூக்கம் – விழிப்பு
இரண்டுக்கும் மத்தியில்
மனமென்னும் பட்டாம்பூச்சி
எப்போது பறக்கிறதோ

கோபத்தின் சிகரத்தில்
துக்கத்தின் அடிவாரத்தில்
எப்போது மனது கூடாரமடிக்கிறதோ -
அப்போதெல்லாம்
எழுதத் தோன்றும்

***

ஒரு மொட்டு உடையும்
சப்தம் கேட்க
எப்போது பூமி நிசப்தமாகிறதோ

கூட்டுப் பறவைகளின் முதல்பாடல்
அதிகாலை இருட்டை
எப்போது உடைக்குமோ

எப்போதெல்லாம்
என் ஜன்னலுக்குப் பக்கத்தில்
மழை பெய்கிறதோ

ஆற்றுக்குள் யாரோ
துணிதுவைக்கும் சுதியில்
சேர்ந்தோ சேராமலோ
குயில்பேடு எப்போது
கூவித் திரியுமோ

கூப்பிடுதூரத்தில்
கூடவே நிலா வர
பழைய சாலை வழி எப்போதெல்லாம்
பயணம் நிகழ்கிறதோ

அப்போதெல்லாம்
எழுதத் தோன்றும்

***

இந்த பூமியின்
ஏதேனுமோர் அசைவு
எப்போதென்னை அசைக்கிறதோ

சின்னஞ்சிறு வயதுமுதல்
உள்நெஞ்சில் அப்பி
உறைந்திருக்கும் படிமங்கள்
உரிந்துரிந்து
எப்போது முகம்காட்டுமோ

இதயம் துலக்கும் சில புத்தகங்களால்
எப்போது மூளையில் தீச்சுடர் மூளுமோ

இயற்கையின் இயற்கையோ
மனிதரின் செயற்கையோ
இன்னோர் உயிரை
எப்போது இம்சிக்குமோ

உயிரில் விழந்த முடிச்சுகளை
இசையென்னும் மாயவிரல்
எப்போதெல்லாம் அவிழ்க்கிறதோ

எப்போதெல்லாம் நான்
சாகவில்லையென்பதற்குச்
சாட்சி கோரப்படுகிறதோ -

அப்போதெல்லாம்
எழுதத் தோன்றும்

***

கடக்கும் பெண்களின்
எனக்கான நாணம்

இடுகாட்டில் நேரும்
இடைக்கால சோகம்

குழையும் குழந்தைகளின்
உடைந்த சிரிப்பு

பூமிக்கிண்ணத்தில்
சொட்டிக்கொண்டேயிருக்கும்
காலத்துளிகளின் ஓசைகள்

நிலத்தில் புதையும் துக்கம்
நிலவை முட்டும் உற்சாகம்

இவைபோல் இன்னபிற
சொல்லும் என்னைக் கவியெழுத.

« பழைய வரவுகள்