தமிழீழ தேசியத்தவைர்

photo2.jpgதிரு.பிரபாகரன் அவர்களின்
குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்.யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும், அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும், தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடி, திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர்கள் வாழும் பூமிதான் வல்வெட்டித்துறை. தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகிறது. காரணம் இங்குதான் தமிழீழ தேசிய விடுதலைப் போரை மக்கள் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவரும் தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றிப் புகழப்படுபவருமான பிரபாகரன் அவர்கள் 1954 ஆம் ஆண்டு கார்த்திகை திங்கள் 26ம் நாள் பிறந்தார்.வல்வெட்டித்துறையில் பிரபலமான குடும்பம் ~திருமேனியார் குடும்பமாகும்~. இக் குடும்பத்தின் மூதாதையரான திருமேனியார் வெங்கடாசலம் என்பவர் அவ்வூரிலுள்ள வல்வை வைத்தீஸ்வரன் கோவிலைக் கட்டியும், வல்வை முத்துமாரியம்மன் கோயில், நெடியகாடு பிள்ளையார் கோயில் இரண்டையும் கட்ட உதவியும் செய்தார். இவ்வூருக்கு அருகிலுள்ள பருத்தித்துறையில் மெத்தை வீட்டு நாகலிங்கம் என்பவரின் குடும்பமும் பல கோவில்களைக் கட்டியெழுப்பிய குடும்பம் ஆகும். இவ்விரு குடும்பத்தினரும் திருமண உறவின் மூலம் இணைந்தனர். திருமேனியார் குடும்பத்தில் தோன்றிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், நாகலிங்கம் வழித்தோன்றிய பார்வதியும் திருமணத்தில் இணைந்து கொண்டனர். இவர்களுக்குப் பிறந்த கடைசிக் குழந்தையே பிரபாகரன் அவர்கள். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள். அண்ணனும் அக்காமார்களும் திருமணம் செய்து விட்டார்கள். பிரபாகரன் அவர்களின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர்.பிரபாகரன் அவர்கள் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்த்pலுள்ள சிதம்பரா கல்லூரியில்” 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். யாழ்ப் பாணத்தில் அந்நாட்களில் செல்வம்மிக்க குடும்பங்களில் பிறந்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »