guest.jpgஇமைய மலை பனித் துளிகளின் வென்மை அவள் கண்களில்,

அதிலும் உயர்ந்து நிற்க்கும் கருங்கற் பாறை விழிகள்.

******

எரியும் சுடர்களை பனித் துளிகள் கொண்டு காக்கிறால்.

******

என்னை நெருப்பில் நீந்தச் சொல்கிறாயே..

நம் காதலை மறக்காதே

******

போதை

sonnenuntergang.jpgதன்னி அடித்தால் தான் போதை தருகிறது பெரியோருக்கு,

சிந்தனையற்ற பெரியோரின் வார்த்தை தருகிறது இளஞனுக்கு வெறியை.

தொலைந்த காதல் கடிதம்

hertz.jpgஎன் இனியவளே,

நான் உன்னை ஒவ்வொரு பொழுதும் சிந்தித்த்துக்கொண்டே இருக்கிறேன். என் கண்களில் காணும் காட்ட்சிகள் உன்னை ஞாபகப்படுத்துகின்றன. என் மனக்கண்களிலும். எம்மை மறப்பதற்கு யார் காரணம்? நானா? யார்? தெரிவித்துவிடு

சரி செய்து முடியும் என்ற நம்பிக்கை என்னை தொந்தரவு செய்கிறது. பாவத்தை என்மேல் சுமத்துவியா? ஏங்குகிறது மனம்.

பாவத்தின் தண்டனையை அனுபவிக்க எனக்கொரு சந்தர்பம் தா. உன்னை மட்டும் நேசிக்காதோ என்காதே. என்னில் நான் இல்லை உன்னை கண்ட முதல். இப்பவும் நாமாகவே வாழ்கிறேன் நான். நீ எவவாறு என்று அறிய துடிகிறேன். என்ன செய்கிறாய், என்ன நினனகிறாய் என்பதை ஒவ்வொரு நிமிடமும் அன்று போல் இன்றும் மனத்திரையில் ஓடுகிறது.

உன்னை குழந்தையாய் பாதுகாத்தேன் என்மதில். நீ விலகிய போது உன்னை தேவதையாக பார்கிறேன். நீ விடும் மூச்சின் அசைவுகள் கூட அழகின் சொர்கமாக தோன்றுகிறது.

நீ என்னை மறந்து விட்டாயா? நீ என்னை நினைக்கிறியா? ஏன் என்னை மறந்தாய்? உண்மையைச் சொல். ஜீரனிக்க முடியவில்லை பெண்னே.

என் வாழ்க்கையை மாற்றியவலே. இன்றும் மாறியது வாழ்க்கை. வாழ்வதற்கு உற்சாகம் இழந்துவிட்டேன். செயல் பட முடியவில்லை. முயற்சிகிறேன் ஒவ்வொரு நிமிடமும்.

நான் திருமணத்துக்கு தயார் வேரு பெண்னுடன். வாழ்க்கையின் ஓட்டத்தில் நில்லா மனிதன் நான் என்பதை அறிவாய். நான் திருமணம் முடியும் வரை உனக்காக காத்திருகிறேன்.

தொடர்வு கொள்ள வழிதேடி அலைகிறேன் கண்னே. நீயும் தேடுகிறாயா? உள்ளத்தில் கவலை இவ்வளவு காலம் தங்கியதில்லை கண்னே. வருடம் 2 கடந்து விட்டது. உன் மனம் எவ்வளவு தூரம் சென்று விட்டது பெண்னே. ஒரு முறை பேசடி மனம் விட்டு. மறுத்து விடாதே கண்னே

தொடரும்….

2.ராஜீவ் காந்தி

cncawsc43ica5g8qt8caw1n28eca2p2pg8can649wtcahvh0bmcafyuf9acan6efk5caftila1ca9vplprcacwjhb5cam6k6qdcah6d1hkcadge5gacagz9jdxca7peywwcaz57xibcalubd5n.jpg2) யாழ் மருத்துவமனை: 1987 Oct21- Oct….

யாழ் நகரைத் தன்வசப்படுத்த இந்திய இராணுவம் முயற்சி செய்யும் என்று சில தினங்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஊழியர்கள் பலர் அங்கு வேலைக்குப் போகாமலேயே இருந்தனர். மற்றவர்கள் இந்திய இராணுவம் நியாயமாக நடந்து கொள்ளும் என்றெண்ணி அவசியமான பணிகளைச் செய்துகொண்டு அங்கேயே தங்கியிருந்தனர். எறிகணைத் தாக்குதலால் மிகப்பலர் காயமுற்றனர். காயமுற்றவர்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்தவண்ணமிருந்தனர். மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவியதால் அறுவைச்சிகிச்சைகளை மேற்கொள்ள வசதியில்லாமல் இருந்தது. 70க்கு மேற்பட்ட சடலங்கள் மருத்துவமனையின் சவக்கிடங்கில் குவிந்து போயிருந்தது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

1.ராஜீவ் காந்தி

images1.jpgjiஇந்தியாவின்(ராஜீவ்காந்தியின்) மறுபக்கம்ராஜீவ் காந்தி அனுப்பிய இந்தியப் படைகள் ஈழத்தில் நிகழ்த்திய சில சம்பவங்கள் இங்கே தொடராக தொடுக்கப்படுகின்றது.1) உரும்பிராய் 1987 Oct

16ஆம் திகதியிலிருந்து உரும்பிராய்வாசிகள் பலத்த செல் தாக்குதலையும் துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. அக்டோபர் 18ஆம் திகதி, ஒரு ஞாயிறன்று உரும்பிராயில் உள்ள இந்துக் கோயிலுக்கருகே ஒரு கண்ணிவெடித் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்தது. உரும்பிராய்ச் சந்தியிலிருந்து வடக்கே அரை மைலுக்கும் முக்கால் மைலுக்கும் இடையில் வசித்து வரும் 66 வயது மனிதர் கண்டபடி சனங்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார். காலை 5.45ற்கும் 6.00 மணிக்கும் இடையில் தனது வீட்டு ஒழுங்கை வழியாக இந்திய இராணுவ வாகனங்கள் வந்து கொண்டிருப்பதை அவர் பார்த்திருக்கிறார். ஆவர்கள் கண்ணில் கண்டதை எல்லாம் சுட்டுக் கொண்டிருந்தார்கள். பின் அவர்கள் அவருடைய வீட்டு வளவுக்குள் நுழைந்து முன்வாசல் கதவின் பூட்டைப் பார்த்துச் சுட்டிருக்கிறார்கள். கதவு உட்பக்கத்திலும் பூட்டப்பட்டிருந்ததால் அது அசைந்து கொடுக்கவில்லை. பின் அந்த இராணுவவீரர்கள் இரண்டு மாடிகளின் ஜன்னல் கண்ணாடிகளை நோக்கிச் சுட்டனர். பின் அவர்கள் அந்த வீட்டை விட்டுவிட்டு அதற்கு எதிரில் இருந்த வீட்டிற்குள் நுழைந்தனர்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »