வளரி இணைகாட்சி
ஆகஸ்ட் 9, 2008 இல் 8:28 மு.பகல் (பிடித்தது)
நல்ல தமிழ் பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள்
ஆகஸ்ட் 8, 2008 இல் 6:15 பிற்பகல் (சிந்திக்க!)
மலேசியத் தமிழர் பாகம்.2
ஆகஸ்ட் 8, 2008 இல் 6:08 பிற்பகல் (கட்டுரைகள்)
1840-ஆம் ஆண்டில் மலாயாவின் கெடா, வெல்லெஸ்லி ஆகிய மாநிலங்களில் புதைபொருள் ஆராய்ச்சியை மேற்கொண்ட ஜேம்ஸ் லோ என்றவர், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இப்பகுதிகளில் இந்தியர் குடியேறி வாழ்ந்ததற்கான சான்றுகளைக் கண்டறிந்துள்ளார். 1937-ஆம் ஆண்டில் டாக்டர். குவாட்ஸ் வேல்ஸ் என்பார் மேற்கொண்ட ஆராய்ச்சிகளும் இதனை உறுதி செய்கின்றன. இக்காலப் பகுதிகளில் ஏற்பட்ட தொடர்புகளும் குடியேற்றங்களும் வளமிக்க நாகரீகத்தின் ஓர் உயர்ந்த நிலையிலேயே ஏற்பட்டிருக்க வேண்டும் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அக்குடியேற்றங்களில் பெரும்பாலானவை ஒரு சிறந்த பண்பாட்டின் தூதுவர்களாலும், அரிய பொருள்களைப் பல நாடுகளிலும் முனைந்து விற்கும் வணிகர்களாலுமே ஏற்படுத்தப் பட்டவை என்பது அவர்கள் கருத்து. காலம் என்ற பெரு நதியில் அடித்துச் செல்லப்பட்டு, இன்று அந்தக் குடியேற்றங்களைப் பற்றிய உண்மைகள் வெறும் நினைவுகளாகவும் வரலாறாகவுமே நிற்கின்றன. இன்று அங்கு வாழும் மலேசிய இந்தியர்களுக்கும் அவர்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.
இவ்வரலாற்றுக்காலப் பகுதியை அடுத்த பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கும் தொடர்பின் விளைவாகவே மீண்டும் அங்கு இந்திய குடியேற்றங்கள் ஏற்படத் தொடங்கன. இன்று அந்த நாட்டில் வாழும் எல்லா தமிழர்களும் இக்காலப் பகுதியிலேயே அல்லது இதற்குப் பின்னரே குடியேறியவர்களின் சந்ததிகளாகவே விளங்குகின்றனர். இந்த இரண்டாம் காலக் கட்டத் தொடர்பு முன் சொன்னதுபோல் ஒரு பண்பாட்டின் தூதுவர்களாலே அல்லது வணிகர்களாலே ஏற்பட்டது அல்ல. ஒரு நாட்டிடம் அடிமைப் பட்டிருந்த இரண்டு அடிமை நாடுகளில் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு உழைப்பதற்காக வந்த தொழிலாளர்களாலே இத்தொடர்பு ஏற்பட்டது.
1786-ஆம் ஆண்டில் பினாங்கு ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்டபோது தொடங்கிய இத்தொடர்பு, இந்த நூற்றாண்டு வரை தொடர்ந்தது எனலாம்.
மலேசியத் தமிழர் பாகம்.1
ஆகஸ்ட் 8, 2008 இல் 6:05 பிற்பகல் (கட்டுரைகள்)
மலேசியத் தமிழர் பாகம்.1
மலாயாவுக்கும் தமிழகத்துக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்பு இருந்தது என்பதற்கான ஆதாரங்களை அகழாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து நிரூபித்திருக்கிறார்கள். அத்தொடர்புகள் பண்பாட்டுத் தூதுவர்களாலும், வணிகர்களாலுமே ஏற்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என்றும், அந்த குடியேற்றங்களைப் பற்றிய உண்மைகள் வரலாறாகவே நிற்கின்றன என்பதும் அவர்கள் கருத்து.
1786-ஆம் ஆண்டுக்குப்பின் மலாயா படிப்படியாக ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டது.


