குமாரசாமிப்புலவர்

சுன்னாகம் குமாரசாமிப்புலவர் (1854-1922, சுன்னாகம், யாழ்ப்பாணம்) இலங்கையைச் சேர்ந்த புலவர் ஆவார்.காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர்களில் இவரும் ஒருவராவர்.

[தொகு] வாழ்க்கை குறிப்பு

சுன்னாகம் குமாரசாமிப்புலவர் அம்பலவாணருக்கும்,சிதம்பரம்மைக்கும் ஜனவரி 18, 1854 ல் ஒரே மகனாக பிறந்தார்.புலவர் சிறுவயதிலிருந்தே தமிழ்,ஆங்கிலம்,சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை கற்று தேர்ந்தார்.1878 ம் ஆண்டில் புலவர் ராவ் பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் கேட்டுக்கொண்டதன்பெயரில் ஏழாலை சைவபிரகாச தமிழ் வித்தியாசாலையில் ஆசிரியராக பணியாற்றினார்.இரு வருடதின் பின் அக் கல்லூரியின் தலமை ஆசிரியரானார். 1882 இல் சின்னாச்சியம்மை என்பவரை மணமுடித்தார்.புலவருக்கு அம்பலவாணபிள்ளை,முத்துகுமாரசுவாமிபிள்ளை எனும் இரு மகனும்,விசாலாட்சியம்மை எனும் மகளும் உண்டு.

[தொகு] இலக்கியதிற்கான பங்களிப்பு

சுன்னாகம் நூலகவளாகதில் அமைந்துள்ள குமாரசாமிப்புலவரின் சிலை

வடமொழியிலிருந்து சில நூல்களை மொழிபெயர்த்தார். சாணக்கிய நீதி வெண்பா, மேக தூதக் காரிகை, இராமோதந்தம் என்பவை அவை. சிசுபாலவதம் உரைநடை மொழிபெயர்ப்பு ஆகும். சில இலக்கிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். தமிழ்ப்புலவர் சரித்திரம் என்பது அவர் தந்த ஒரு வரலாற்று நூல். வேறாக இலக்கியசொல் அகராதி,நீதிநெறி விளக்கம் போன்றவையும்,சில செய்யுள் நூல்களும் உரைநடை நூல்களும் இயற்றினார்.