பொருளாதாரத் தாக்கத்தால் புலம் பெயர்ந்த பறவைகள் – மும்பை சரா

இட‌ம் பெய‌ரும் ப‌ற‌வைக‌ள்  (Birds Migration)

 

மற்ற உயிரினங்களுக்கு இடம் ஏது என்ற கேள்விதான் அனைவர் மனதிலும் எழும். இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக லட்சக்கனக்கான வெளிநாட்டு பறவைகள் மும்பையை நோக்கி படை எடுக்க துவங்கி உள்ளது.Image

 

இனப்பெருக்கத்திற்காக வருபவை

 

ஜனவரி மாத இறுதியில் மும்பையில் உள்ள வாஷி கடற்கரை, சிவரி கழிமுக பகுதி மற்றும் பேலாப்பூர் போன்ற கடற்கரை பகுதியில் வடஐரோப்பா, சைபீரியா, ரஷ்யா மற்றும் மங்கோலியாவின் கிழக்கு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பறவைகள் மும்பை, நவிமும்பை கடற்கரைக்கு வரும். இங்கு வரும் பறவைகள் பிப்ரவரி முதல் மே வரை மும்பை கடற்கரையில் தங்கி இனப்பெருக்கம் செய்துவிட்டு தனது புதிய குடும்பத்துடன் ஜூன் மாத முதல் வாரத்தில் சென்றுவிடும்.

 

ப‌ற‌வைக‌ளின் வ‌கைக‌ள்

 

இந்தவருடம் லட்சக்கனக்கான செங்கால் நாரைகள், கரண்டி வாய் நாரைகள், ஜொவ்ஸ், சைபீரியன் வெள்ளை போன்ற பறவைகள் மும்பை வானில் வலம் வர ஆரம்பித்துவிட்டது. மும்பை மற்றும் நவிமும்பை பகுதியில் உள்ள கடற்கரைகள் மாலை நேரங்களில் அதிக தூரம் உள்வாங்கிவிடும். இதனால் சிவ்ரி, வாஷி போன்ற கடற்கரை பகுதிகளில் கிலோ மீட்டர் தூரம் சதுப்பு நிலங்கள் தோன்றி விடும். இந்த சதுப்பு நிலங்களில் நத்தைகள், சிறு மீன்கள் சிக்கி கொள்கின்றன. இந்த மீன்கள் மற்றும் நத்தைகளை வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு கடற்கரை ஓரங்களில் உள்ள பல்லாயிரக்கனக்கான கடல் மரங்களில் கூடுகட்டி குஞ்சுகளை பொறிக்கின்றன. இந்த வசதிக்களுக்காகவே ஆண்டாண்டுகாலமாக குளிர்பிரதேச பறவைகள் மும்பை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.Image

 

நகரின் ஆரவாரம் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை

 

இடம் பெயர்ந்துவந்த பறவைகளுக்கு மும்பை நகரின் அசுரவேக வளர்ச்சி எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முக்கிய காரணம் பூகோள அமைப்பின்படி மும்பை கடற்கரைகள் மாலை நேரங்களில் அதிகம் உள் வாங்கிவிடும். இதனால் நகரின் சிவ்ரி, வாஷி, பேலாப்பூர் போன்ற கடற்கரை பகுதிகளில் பல கிலோ மீட்டருக்கு சகதிகள் தோன்றிவிடும். இந்த சகதிகள் ஆட்களை விழுங்கு அளவிற்கு ஆழமாக இருப்பதால் மனிதர்கள் எளிதில் நடமாடுவது இல்லை. உணவுகளும் அதிக அளவில் கிடைக்கின்ற காரணத்தால் பறவைகளை மும்பை கடற்கரை கவர்ந்திழுக்கிறது.

 

பாதுகாப்பிற்கான‌ ந‌ட‌வ‌டிக்கை

 

இந்த வருடம் குளிர் பிரதேசங்களில் விரைவிலேயே கால நிலையில் மாற்றம் துவங்கிவிட்டது. இதனை அடுத்து தங்களது பயணத்திட்டத்தை முன்கூட்டியே முடிவு செய்து பறவைகள் மும்பை நோக்கி வரத்துவங்கிவிட்டன. மும்பை மற்றும் நவி மும்பை மாநகராட்சிகள் இந்த பறவைகள் கரையோர மரங்களில் தங்கும்போது யாரும் இந்த பறவைகள் வேட்டையாடக் கூடாது என்றும், கூண்டில் அடைப்பதோ அல்லது அந்த பறவைகளின் கூடுகளை சிதைப்பதோ கூடாது என்றும், இப்படி செய்பவர்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் தண்டனைகள் கிடைக்கும் என்றும் ஆனையிட்டுள்ளது. சனி ஞாயிறு ஆகிவிட்டாலே, தூரத்தில் லட்சக்கணக்கில் தெரியும் பறவைகளை காண மும்பை நகர மக்கள் இந்த கடற்கரைகளை நோக்கி படை எடுக்கத்துவங்கிவிட்டனர். மும்பை மற்றும் மராட்டிய மாநிலத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகள் இந்த பறவைகளை மாணவ, மாணவிகளுக்கு காண்பிக்க சுற்றுலா அழைத்து வரஆரம்பித்துவிட்டது.Image

 

இந்த பறவைகளின் வருகை குறித்து பறவை பிரியர் ஒருவர் கூறியபோது “பொருளாதாரத் தாக்கம் இந்த பறவைகளையும் பாதித்து விட்டது போல, இதனால் சிக்கன நடவடிக்கையாக முன்கூட்டியே மும்பைக்கு வந்துவிட்டது” இவ்வாறு கூறினார்

பிரபஞ்சம் எத்தனை பெரியது ?


 

(கட்டுரை: 2)

 

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
 

பிரபஞ்சம் சோப்புக் குமிழிபோல்
விரிகிறது யார் ஊதி ?
பரிதி மண்டலக் கோள்களை
கவர்ச்சி விசை
ஈர்க்கிறது யார் ஓதி ? 
சுருள் சுருளாய்
ஆக்டபஸ் கரங்களில்
ஒட்டிக் கொண்ட
ஒளிமயத் தீவுகள் நகரும்
கால வெளியினிலே ! 
ஓயாத
பாய்மரப் படகுகளின்
உந்து சக்தியை
அலைகள் எதிர்க்க மாட்டா !
விலக்கு விசைப் பயணத்தில்
ஒளிமய மந்தைகள்
உலவும் குமிழி !
கலியுகத்தில் மனிதன் படைத்த
அகிலவலை யுகத்தில்
திரும்பவும்
பொரிக்கோள மாகும்
பிரபஞ்சம் ! இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »