ஜேர்மனியில் 1894 ஆண்டுளில் 50% மக்களின் முதல்பெயர் கிறிஸ்தவமாக இருந்தது. 1994ல் 32% மட்டுமே
சவிடி ஆராபியாவில் தடை செய்யப்பட்ட பாபி கேர்ல் பொம்மையை வாங்கும் விலை 25€.
நவம்பர் 29, 2009 இல் 6:50 பிற்பகல் (அறிந்துகொள்)
ஜேர்மனியில் 1894 ஆண்டுளில் 50% மக்களின் முதல்பெயர் கிறிஸ்தவமாக இருந்தது. 1994ல் 32% மட்டுமே
சவிடி ஆராபியாவில் தடை செய்யப்பட்ட பாபி கேர்ல் பொம்மையை வாங்கும் விலை 25€.
நவம்பர் 16, 2009 இல் 7:44 பிற்பகல் (அறிந்துகொள்)
மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம்
மொழிதான் ஒரு கலாச்சாரத்தின் இருப்பை பறை சாற்றுகிறது. மொழியானது பேசப்படுகிற ஒரு தொடர்பு ஊடகம் என்ற நிலையை கடந்து ஒரு பண்பாட்டின் அடையாளமாகவும் உள்ளது. இவ்வகையில் தமிழ்மொழி, தமிழ் பண்பாட்டின் பழமையையும் அதன் வளமையையும் வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. தமிழ் மொழியின் பழமைக்கும் வளமைக்கும் ஆதாராமாகவும், சாட்சியாகவும் இருப்பது அதன் தொன்மையான இலக்கியங்கள். தமிழ் மொழியானது உலகின் மிகவும் பழமையான நூல்களில் ஒன்றாக கருதப்படும் “தொல்காப்பியத்தை” இன்றும் கொண்டிருக்கிறது. இவ்வகை ஆதாரங்கள்தான் தமிழுக்கு செம்மொழி என்ற சிறப்பையும் பெற்று தந்துள்ளன. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளாக மாறாத இலக்கண கட்டமைப்பையும் கொண்டுள்ளது. இத்தகைய சிறப்புகளை கொண்டிருக்கும் தமிழ் மொழி இன்றைய நவீன இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
செப்டம்பர் 21, 2009 இல் 8:46 மு.பகல் (அறிந்துகொள்)
புக்கைப்பிடிப்பவரின் புகையை பிள்ளைகலள் சுவாசிப்பதால், பிள்ளைகளின் சுவாசப்ப்பை மட்டும் பாதிப்பதி
ல்லை.
பிள்ளைகளின் பெற்றோர், குழந்தைகலள் முன் நாள்10 புக்கையில்லை புகைத்தால் , பிள்ளைகளின் இரத்தத்திலும் மாற்றம் ஏற்படும் அபாயம் உள்ளது.இது 4 வகுப்பு படிக்கும் பிள்ளைகளை வைத்து ஜெர்மனியில் பரிசோதிக்கப்பட்ட போழுது தெரிய வந்தது.எரிவுத்தன்மை அதிகரித்து, இரத்த இரசாயன மாற்றங்களில் வீழ்ச்சி கானப்படுகிறது.
ஆராச்சியின் படி, குழந்தைகளின் இரத்தத்தில் ஏற்படும் மாற்றமானது, முன்கூட்டியே உடல் சுண்னாப்பு ஏற்பட வும், இருதய சுற்று கோலாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என சொல்லுகிறது.
ஏப்ரல் 19, 2009 இல் 3:06 பிற்பகல் (அறிந்துகொள்)
இடம் பெயரும் பறவைகள் (Birds Migration)
மற்ற உயிரினங்களுக்கு இடம் ஏது என்ற கேள்விதான் அனைவர் மனதிலும் எழும். இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக லட்சக்கனக்கான வெளிநாட்டு பறவைகள் மும்பையை நோக்கி படை எடுக்க துவங்கி உள்ளது.
இனப்பெருக்கத்திற்காக வருபவை
ஜனவரி மாத இறுதியில் மும்பையில் உள்ள வாஷி கடற்கரை, சிவரி கழிமுக பகுதி மற்றும் பேலாப்பூர் போன்ற கடற்கரை பகுதியில் வடஐரோப்பா, சைபீரியா, ரஷ்யா மற்றும் மங்கோலியாவின் கிழக்கு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பறவைகள் மும்பை, நவிமும்பை கடற்கரைக்கு வரும். இங்கு வரும் பறவைகள் பிப்ரவரி முதல் மே வரை மும்பை கடற்கரையில் தங்கி இனப்பெருக்கம் செய்துவிட்டு தனது புதிய குடும்பத்துடன் ஜூன் மாத முதல் வாரத்தில் சென்றுவிடும்.
பறவைகளின் வகைகள்
இந்தவருடம் லட்சக்கனக்கான செங்கால் நாரைகள், கரண்டி வாய் நாரைகள், ஜொவ்ஸ், சைபீரியன் வெள்ளை போன்ற பறவைகள் மும்பை வானில் வலம் வர ஆரம்பித்துவிட்டது. மும்பை மற்றும் நவிமும்பை பகுதியில் உள்ள கடற்கரைகள் மாலை நேரங்களில் அதிக தூரம் உள்வாங்கிவிடும். இதனால் சிவ்ரி, வாஷி போன்ற கடற்கரை பகுதிகளில் கிலோ மீட்டர் தூரம் சதுப்பு நிலங்கள் தோன்றி விடும். இந்த சதுப்பு நிலங்களில் நத்தைகள், சிறு மீன்கள் சிக்கி கொள்கின்றன. இந்த மீன்கள் மற்றும் நத்தைகளை வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு கடற்கரை ஓரங்களில் உள்ள பல்லாயிரக்கனக்கான கடல் மரங்களில் கூடுகட்டி குஞ்சுகளை பொறிக்கின்றன. இந்த வசதிக்களுக்காகவே ஆண்டாண்டுகாலமாக குளிர்பிரதேச பறவைகள் மும்பை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.
நகரின் ஆரவாரம் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை
இடம் பெயர்ந்துவந்த பறவைகளுக்கு மும்பை நகரின் அசுரவேக வளர்ச்சி எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முக்கிய காரணம் பூகோள அமைப்பின்படி மும்பை கடற்கரைகள் மாலை நேரங்களில் அதிகம் உள் வாங்கிவிடும். இதனால் நகரின் சிவ்ரி, வாஷி, பேலாப்பூர் போன்ற கடற்கரை பகுதிகளில் பல கிலோ மீட்டருக்கு சகதிகள் தோன்றிவிடும். இந்த சகதிகள் ஆட்களை விழுங்கு அளவிற்கு ஆழமாக இருப்பதால் மனிதர்கள் எளிதில் நடமாடுவது இல்லை. உணவுகளும் அதிக அளவில் கிடைக்கின்ற காரணத்தால் பறவைகளை மும்பை கடற்கரை கவர்ந்திழுக்கிறது.
பாதுகாப்பிற்கான நடவடிக்கை
இந்த வருடம் குளிர் பிரதேசங்களில் விரைவிலேயே கால நிலையில் மாற்றம் துவங்கிவிட்டது. இதனை அடுத்து தங்களது பயணத்திட்டத்தை முன்கூட்டியே முடிவு செய்து பறவைகள் மும்பை நோக்கி வரத்துவங்கிவிட்டன. மும்பை மற்றும் நவி மும்பை மாநகராட்சிகள் இந்த பறவைகள் கரையோர மரங்களில் தங்கும்போது யாரும் இந்த பறவைகள் வேட்டையாடக் கூடாது என்றும், கூண்டில் அடைப்பதோ அல்லது அந்த பறவைகளின் கூடுகளை சிதைப்பதோ கூடாது என்றும், இப்படி செய்பவர்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் தண்டனைகள் கிடைக்கும் என்றும் ஆனையிட்டுள்ளது. சனி ஞாயிறு ஆகிவிட்டாலே, தூரத்தில் லட்சக்கணக்கில் தெரியும் பறவைகளை காண மும்பை நகர மக்கள் இந்த கடற்கரைகளை நோக்கி படை எடுக்கத்துவங்கிவிட்டனர். மும்பை மற்றும் மராட்டிய மாநிலத்தின் பள்ளி மற்றும் கல்லூரிகள் இந்த பறவைகளை மாணவ, மாணவிகளுக்கு காண்பிக்க சுற்றுலா அழைத்து வரஆரம்பித்துவிட்டது.
இந்த பறவைகளின் வருகை குறித்து பறவை பிரியர் ஒருவர் கூறியபோது “பொருளாதாரத் தாக்கம் இந்த பறவைகளையும் பாதித்து விட்டது போல, இதனால் சிக்கன நடவடிக்கையாக முன்கூட்டியே மும்பைக்கு வந்துவிட்டது” இவ்வாறு கூறினார்
ஏப்ரல் 19, 2009 இல் 2:20 பிற்பகல் (அறிந்துகொள்)
(கட்டுரை: 2)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
பிரபஞ்சம் சோப்புக் குமிழிபோல்
விரிகிறது யார் ஊதி ?
பரிதி மண்டலக் கோள்களை
கவர்ச்சி விசை
ஈர்க்கிறது யார் ஓதி ?
சுருள் சுருளாய்
ஆக்டபஸ் கரங்களில்
ஒட்டிக் கொண்ட
ஒளிமயத் தீவுகள் நகரும்
கால வெளியினிலே !
ஓயாத
பாய்மரப் படகுகளின்
உந்து சக்தியை
அலைகள் எதிர்க்க மாட்டா !
விலக்கு விசைப் பயணத்தில்
ஒளிமய மந்தைகள்
உலவும் குமிழி !
கலியுகத்தில் மனிதன் படைத்த
அகிலவலை யுகத்தில்
திரும்பவும்
பொரிக்கோள மாகும்
பிரபஞ்சம் ! இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »