திறக்கப்பட்ட கதவுகளின் வழியே…
திறக்கப்பட்ட கதவுகளின் வழியே…
கடந்துசெல்லும் காலங்களின் ஊடாகதிறக்கப்பட்ட
கதவுகள் மூடப்பட்டும்மூடப்பட்ட கதவுகள் மறுபடி
திறக்கப்பட்டும்சிலவேளைகளில் மட்டும்காற்று வருமென்ற
எண்ணங்களோடுதான்காத்திருப்பு தொடர்கிறது எங்களுக்கு…!
எங்களின் எதிர்காலம் குறித்தபேச்சுக்களை விட்டால்நிகழ்காலம் குறித்த
நாற்காலிகளின் கனவுகள்வெறும்… கனவாகவே போய்விடும் அவர்களுக்கு…!
இதனால்தான் அன்போடு பேசலாமென அக்கறையோடு
அவர்கள்இடைக்கிடையே வருவார்கள்…!வாருங்கள்ஊரெல்லாம்
ஓடித்திரியலாமெனஅழைத்துப்போவார்கள்சுமக்கமுடியாத
சுமைகளை எல்லாம் நெஞ்சிலே
சுமந்துகொண்டுஅவர்களின் பின்னாலே
ஓடித்திரிவோம்கடைசியாகக்கூட
அவர்கள்ஒன்றிலிருந்து ஆறுதடவைகள்நாடுநாடாய் அழைத்துப்போனார்கள்.
இருப்பினும்…
ஒரே ஒரு அதிருப்திதான் அவர்களிகன்மீது எங்களுக்கு…!
ஆறுதடவைகள் பேசலாமென எங்கெங்கோ அழைத்துப் போனவர்கள்
ஒரு தடவையாவது பேசியிருக்கலாம்…!!!


