1.ராஜீவ் காந்தி

images1.jpgjiஇந்தியாவின்(ராஜீவ்காந்தியின்) மறுபக்கம்ராஜீவ் காந்தி அனுப்பிய இந்தியப் படைகள் ஈழத்தில் நிகழ்த்திய சில சம்பவங்கள் இங்கே தொடராக தொடுக்கப்படுகின்றது.1) உரும்பிராய் 1987 Oct

16ஆம் திகதியிலிருந்து உரும்பிராய்வாசிகள் பலத்த செல் தாக்குதலையும் துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. அக்டோபர் 18ஆம் திகதி, ஒரு ஞாயிறன்று உரும்பிராயில் உள்ள இந்துக் கோயிலுக்கருகே ஒரு கண்ணிவெடித் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்தது. உரும்பிராய்ச் சந்தியிலிருந்து வடக்கே அரை மைலுக்கும் முக்கால் மைலுக்கும் இடையில் வசித்து வரும் 66 வயது மனிதர் கண்டபடி சனங்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார். காலை 5.45ற்கும் 6.00 மணிக்கும் இடையில் தனது வீட்டு ஒழுங்கை வழியாக இந்திய இராணுவ வாகனங்கள் வந்து கொண்டிருப்பதை அவர் பார்த்திருக்கிறார். ஆவர்கள் கண்ணில் கண்டதை எல்லாம் சுட்டுக் கொண்டிருந்தார்கள். பின் அவர்கள் அவருடைய வீட்டு வளவுக்குள் நுழைந்து முன்வாசல் கதவின் பூட்டைப் பார்த்துச் சுட்டிருக்கிறார்கள். கதவு உட்பக்கத்திலும் பூட்டப்பட்டிருந்ததால் அது அசைந்து கொடுக்கவில்லை. பின் அந்த இராணுவவீரர்கள் இரண்டு மாடிகளின் ஜன்னல் கண்ணாடிகளை நோக்கிச் சுட்டனர். பின் அவர்கள் அந்த வீட்டை விட்டுவிட்டு அதற்கு எதிரில் இருந்த வீட்டிற்குள் நுழைந்தனர்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

தமிழீழ தேசியத்தவைர்

photo2.jpgதிரு.பிரபாகரன் அவர்களின்
குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்.யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட மன்னர்கள் காலத்திலும், அதற்குப் பின்னரும் வட தமிழீழத்தின் முக்கிய துறைமுகப்பட்டினங்களில் ஒன்றாகவும், தமிழக கோடிக்கரைக்கும் வட தமிழீழத்திற்கும் பாலமாகவும் கப்பலோடி, திரைகடல்களில் திரவியம் குவித்த மறவர்கள் வாழும் பூமிதான் வல்வெட்டித்துறை. தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகிறது. காரணம் இங்குதான் தமிழீழ தேசிய விடுதலைப் போரை மக்கள் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவரும் தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றிப் புகழப்படுபவருமான பிரபாகரன் அவர்கள் 1954 ஆம் ஆண்டு கார்த்திகை திங்கள் 26ம் நாள் பிறந்தார்.வல்வெட்டித்துறையில் பிரபலமான குடும்பம் ~திருமேனியார் குடும்பமாகும்~. இக் குடும்பத்தின் மூதாதையரான திருமேனியார் வெங்கடாசலம் என்பவர் அவ்வூரிலுள்ள வல்வை வைத்தீஸ்வரன் கோவிலைக் கட்டியும், வல்வை முத்துமாரியம்மன் கோயில், நெடியகாடு பிள்ளையார் கோயில் இரண்டையும் கட்ட உதவியும் செய்தார். இவ்வூருக்கு அருகிலுள்ள பருத்தித்துறையில் மெத்தை வீட்டு நாகலிங்கம் என்பவரின் குடும்பமும் பல கோவில்களைக் கட்டியெழுப்பிய குடும்பம் ஆகும். இவ்விரு குடும்பத்தினரும் திருமண உறவின் மூலம் இணைந்தனர். திருமேனியார் குடும்பத்தில் தோன்றிய திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், நாகலிங்கம் வழித்தோன்றிய பார்வதியும் திருமணத்தில் இணைந்து கொண்டனர். இவர்களுக்குப் பிறந்த கடைசிக் குழந்தையே பிரபாகரன் அவர்கள். இவருக்கு ஒரு அண்ணனும் இரண்டு அக்காமாரும் இருக்கிறார்கள். அண்ணனும் அக்காமார்களும் திருமணம் செய்து விட்டார்கள். பிரபாகரன் அவர்களின் தந்தை இலங்கை அரசாங்கத்தின் மாவட்டக் காணி அதிகாரியாகப் பல வருடங்கள் கடமை புரிந்தவர்.பிரபாகரன் அவர்கள் தனது கல்வியை வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்த்pலுள்ள சிதம்பரா கல்லூரியில்” 10ம் வகுப்பு வரையிலும் கற்றார். யாழ்ப் பாணத்தில் அந்நாட்களில் செல்வம்மிக்க குடும்பங்களில் பிறந்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

சே குவேரா: வரலாற்றின் நாயகன்-5

குயூபாவின் முக்கிய நகரமான ஹவானாவில் படிப்பை முடித்த பின்னர் பிடல் காஸ்ட்ரோ வழக்கறிஞராக பணியாற்ற துவங்கினார். தங்களது வழக்குகளுக்கான கூலியை கொடுக்க முடியாத ஏழைகளுக்காகவே காஸ்ட்ரோ இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

சே குவேரா: வரலாற்றின் நாயகன்-4

குயூபாவில் சன் மார்டின் அதிபராக பதவியேற்ற போது பிடல் காஸ்ட்ரோ சேசு சபையினர் நடத்திய உயர்நிலை பள்ளியில் கல்வி கற்க சேர்ந்தார். 1944 ல் உயர்நிலை பள்ளி அளவிலான குயூபாவின் சிறந்த விளையாட்டு வீரராக காஸ்ட்ரோ தேர்வு செய்யப்பட்டார். தன்னம்பிக்கையும், இலட்சிய உறுதியும் மிக்க காஸ்ட்ரோ பள்ளிப்படிப்பை முடித்து 1945ல் ஹவானா பல்கலைகழகத்தில் பயில துவங்கினார். மாணவப் பருவத்திலேயே அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்ட பிடல் காஸ்ட்ரோ ஏப்ரல் 8, 1948ல் கொலம்பியா நாட்டில் நடைபெற்ற மக்கள் எழுச்சியில் கலந்துகொண்டார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

சே குவேரா: வரலாற்றின் நாயகன்-3

ர்ஜென்டினாவில் 1930ல் ஏற்பட்ட புரட்சியின் பின்விளைவாக பொருளாதாரம் பாதிப்புக்குள்ளானது. அர்ஜென்டினாவிலிருந்து மாட்டிறைச்சி, கோதுமை முதலியவை ஐரோப்பியாவிற்கு ஏற்றுமதியை மையமாக உற்பத்தி நடைபெற்றது. உள்நாட்டில் மக்களுக்கு தேவையான பொருட்கள் கடுமையாக விலையேறியது. பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் தங்களது வாழ்விற்காக வேலை தேடி நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். புயெனெஸ் எயர்ஸ்ல் மட்டும் சுமார் 1.4 மில்லியன் பேர் கிராமப்புறங்களிலிருந்து இடம்பெயர்ந்து வ இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

« பழைய வரவுகள்